Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூமராங்.. டென்ஷன் ஆன ஈபிஎஸ்.. ‘நமக்கு எதிரா திரும்பிடுச்சு.. உஷார்’ - ஆதரவாளர்களுக்கு பறந்த அட்வைஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஓ.பன்னீர்செல்வத்துக்கு குடைச்சல் கொடுக்க ஈபிஎஸ் தரப்பு எடுத்த முயற்சி அவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதுபற்றி தனது ஆதரவாளர்களிடம் கடுமையாகப் பேசியுள்ளாராம் ஈபிஎஸ்.

அதிமுகவில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே நிலவி வரும் மோதலைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஓ.பன்னீர்செல்வத்துக்கு பல வழிகளில் குடைச்சல் கொடுத்து வருகிறது.

அந்த வகையில், தனக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பை தவறாகப் பயன்படுத்திய ஓபிஎஸ்ஸுக்கு வழங்கப்படும் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும் என ஈபிஎஸ் ஆதரவாளர் மனு அளித்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், ஐகோர்ட் நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்ததோடு, இதுபோன்ற வெற்று குற்றச்சாட்டுகளை கூறி இனி வழக்கு தொடர்ந்தால் அபராதம் விதிக்க நேரிடும் என்று எச்சரித்தார்.

 தொடர்ந்து குடைச்சல்

தொடர்ந்து குடைச்சல்

அதிமுகவில் நிலவி வரும் மோதலைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வத்தை முழுமையாக ஆஃப் செய்யும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது எடப்பாடி பழனிசாமி டீம். ஓ.பன்னீர்செல்வம் வகித்து வந்த பொறுப்புகளைப் பறித்து அவரைக் கட்சியை விட்டு மொத்தமாக நீக்கிய நிலையில், அவர் வகித்து வந்த சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியையும் பறிப்பதாக அறிவித்தார் ஈபிஎஸ். அவரது ஆதரவாளர்களையும் கூண்டோடு தூக்கினார். அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியையும் பெற்றார் எடப்பாடி பழனிசாமி.

 ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்க

ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்க


அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கிலும் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் சாதகமான தீர்ப்பைப் பெற்றார் ஈபிஎஸ். அதோடு நில்லாமல், ஓ.பன்னீர்செல்வம் இனி அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் வரவே கூடாது என்பதற்கான வேலைகளிலும் ஈபிஎஸ் தரப்பினர் இறங்கியுள்ளனர். மேலும், ஓபிஎஸ்ஸுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அவருக்கு வழங்கப்பட்டு வரும் போலீஸ் பாதுகாப்பையும் வாபஸ் பெற வேண்டும் என மூவ் செய்தது ஈபிஎஸ் டீம்.

 ஈபிஎஸ் ஆதரவாளர் மனு

ஈபிஎஸ் ஆதரவாளர் மனு

அதிமுக தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டச் செயலாளரும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளருமான ஆதிராஜாராம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 3 முறை தமிழக முதல்வராகவும், ஒருமுறை துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த ஜூலை 11-ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அதேநேரம், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்தார்.

சட்டவிரோதமாக செயல்பட்டாரா ஓபிஎஸ்

சட்டவிரோதமாக செயல்பட்டாரா ஓபிஎஸ்

அப்போது, ஓபிஎஸ் உடன் வந்தவர்கள் கலவரத்தில் ஈடுபட்டு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஓபிஎஸ் தனக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை சட்டவிரோத செயலுக்கு பயன்படுத்தியுள்ளார். இதனால், போலீஸ் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும் என்று டிஜிபிக்கு நான் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பன்னீர்செல்வம், தற்போது அரசியலிலும், கட்சியிலும் எந்த பொறுப்பிலும் இல்லை. அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை திரும்ப பெற வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இனி அபராதம் தான்

இனி அபராதம் தான்

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த முகாந்திரமும் இல்லாமல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதுபோன்ற வெற்று குற்றச்சாட்டுகளை கூறி இனி வழக்கு தொடர்ந்தால், மனுதாரருக்கு அபராதம் விதிக்க நேரிடும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

எடப்பாடி ஷாக்

எடப்பாடி ஷாக்

சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவால் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஷாக் ஆகியுள்ளனர். ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்க போட்ட திட்டத்தால் நமக்கே சோதனை வந்துவிட்டதே என ஈபிஎஸ்ஸும் டென்ஷன் ஆகியுள்ளாராம். நீதிமன்றத்தில் நமக்கு எதிரான எந்த முடிவும் வரக்கூடாது, இனிமேல் பலவீனமே ஏற்படக்கூடாது என தனது ஆதரவாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருந்த நிலையில், இந்த மேட்டர் ஈபிஎஸ் தரப்புக்கு அடியாக விழுந்துள்ளது.

டென்ஷன்

டென்ஷன்

இந்த விவகாரம் குறித்து தனது ஆதரவாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த நேரத்தில் நீதிமன்றத்தில் நமது ஒவ்வொரு நகர்வும் முக்கியமானது. எந்த விதத்திலும் நமது நோக்கத்திற்கு சிக்கல் வந்துவிடக் கூடாது. ஓபிஎஸ்ஸுக்கு எதிராகச் செயல்படுகிறோம் என எடுத்தோம் கவிழ்த்தோம் என இறங்கினால் இப்படித்தான் நடக்கும். கவனமாக இருங்கள். நன்றாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசிக்காமல் எந்த நடவடிக்கையிலும் இறங்கக் கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக கூறியுள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+