எடப்பாடி vs விஐபி மாஜி மோதல்.. குறுக்கே வந்த "சாமியார்".. ஆட்டத்தையே கலைக்க போகிறார்.. எல்லாம் ஓவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சம் அடைந்து வருகிறதாம். இந்த மோதல் எடப்பாடி பழனிசாமிக்கும்.. கட்சிக்குள் இருக்கும் விஐபி மாஜி ஒருவருக்கும் இடையிலான மோதல் என்று கூறப்படுகிறது. அது என்ன மோதல்? ஏன் இவர்கள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்?

அதிமுகவில் இப்போதுதான் உட்கட்சி மோதல் முடிவிற்கு வந்தது. இப்போதுதான் ஓ பன்னீர்செல்வம் உட்கட்சி மோதலில் தோல்வி அடைந்து எடப்பாடி பழனிசாமி வென்றார். அப்படி இருக்கும் போது மீண்டும் யாருக்கும் யாருக்கும் பிரச்சனை என்று நீங்கள் கேட்கலாம். இந்த மோதல் அதிமுக - பாஜக பிரிவால் ஏற்பட்ட மோதல் ஆகும்.

கோபப்பட்ட மாஜி; அதிமுக - பாஜக பிரிவை கட்சியில் இருக்கும் சில மாஜிக்கள் விரும்பவில்லை. முக்கியமாக விஐபி மாஜி ஒருவர் இதை கொஞ்சம் கூட விரும்பவில்லையாம். அதிமுகவில் அவர் முக்கியமான தலைவர் என்றாலும்.. பாஜகவிற்குதான் மிக நெருக்கம். பாஜகவுடன்தான் அதிக நட்பாக இருப்பார். முக்கியமாக பிஸ்னஸ் மேன் என்பதால் இவர் தனக்கு பாஜக தயவு வேண்டும் என்று நினைக்கிறார்.

Edappadi Palanisamy vs AIADMK top leader : A godman is reportedly coming inside the scene

பாஜக கூட்டணியில் இருந்தால்.. அமலாக்கத்துறை நம்மை கை வைக்காது. ஒருவேளை பாஜகவுடன் கூட்டணியை முறித்தால் கண்டிப்பாக பாஜகவை விமர்சனம் செய்ய வேண்டி இருக்கும். தேர்தல் நேரத்தில் மோடியை எதிர்த்து பேச வேண்டி இருக்கும். அப்படி நடந்தால் பாஜக நமக்கு எதிராக திரும்பும். தேர்தல் நேரத்தில் நமக்கு எதிராக திரும்புவார்கள். ஏன் ரெய்டு கூட விடுவார்கள்.

நமக்கு பிஸ்னஸ் இருக்கிறது. இப்போது பாஜக உறவை முறிக்க என்ன காரணம். திமுக ஆட்சியில் இருக்கும் போது நம்மை பாதுகாப்பது மத்திய அரசுதானே? மத்திய அரசு தானே மாநில அரசிடம் இருந்து நம்மை பாதுகாக்க முடியும். அப்படி இருக்கும் போது ஏன் பாஜக கூட்டணியை முறிக்க வேண்டும் என்று அந்த மாஜி கோபம் அடைந்து உள்ளாராம்.

( என் ஜாதகம் ஸ்ட்ராங்க்.. கட்சியை உடைக்க போகிறாயா?.. மாஜியிடம் எகிறிய எடப்பாடி.. அதிமுகவில் அபாயம்)

முறிக்க பிளான்: இந்த நிலையில்தான் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைக்க வேண்டும் என்று கண்டிஷனை போட அவர் முடிவு செய்துள்ளாராம். அந்த மாஜி எடப்பாடியிடம் சென்று.. இந்த கோரிக்கையை வைக்க உள்ளாராம். அந்த கோரிக்கையை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால்.. கட்சியை உடைக்க கூட அவர் ரெடியாக இருக்கிறாராம். பாஜகவிற்கு ஆதரவாக கட்சியை உடைத்து கழகத்தில் கலகம் ஏற்படுத்தும் முடிவில் கூட அவர் இருக்கிறாராம்.

சாமியார் வருகை: இதில்தான் சாமியார் ஒருவர் உள்ளே வந்துள்ளாராம். ஒரு பிரபல பவர்புல் சாமியாரை அவர் நாடி உள்ளாராம். அரசியல் ரீதியாக அவருக்கு வாய்ஸ் இருக்கிறது. இந்த மாஜியும் கூட அந்த சாமியாருக்கு மிக நெருக்கம் ஆவார். அவருக்கு பாஜகவுடன் நிறைய அரசியல் நெருக்கம் உள்ளது.

( எம்பி ஆகும் பிக் பாஸ்? அதிமுக - பாஜக கூட்டணி முறிவால் கமல்ஹாசன்தான் செம குஷி.. ஏன்? நடந்தது என்ன?)

இந்த நிலையில் சாமியார் உதவியுடன் பல எம்எல்ஏக்களை, மாவட்ட செயலாளர்களை இழுத்து கட்சியை உடைக்க அந்த மாஜி முயற்சி செய்து வருகிறாராம். இதற்கு பதிலடி கொடுக்க எடப்பாடி தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம். மொத்தமாக இவர்களின் ஆட்டத்தை கலைக்க, கட்சியில் கிளர்ச்சியை முடிவு கட்ட பணிகளை செய்து கொண்டு வருகிறாராம்.

இதனால் அதிமுகவில் அடுத்த சில நாட்களில் கண்டிப்பாக பெரும் பரபரப்பு நிலவும் என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+