Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த ஒரு விஷயம்.. சீக்கிரமே எடப்பாடியை தூக்கி அடிக்கும்! அடித்து சொன்ன அரசியல் எக்ஸ்பர்ட்! என்ன இது?

அதிமுக விதிகள் படி பார்த்தால் இரட்டை இலையில் ஒரு இலை எடப்பாடிக்கும், ஒரு இலை ஓ பன்னீர்செல்வத்திற்கும் வழங்கப்படும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 லோக்சபா தேர்தல் மற்றும் அதற்கு அடுத்த சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மிக முக்கியமான சிக்கல் ஒன்று ஏற்படும் என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இன்னொரு பக்கம் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார்.

எடப்பாடி பேச்சு

எடப்பாடி பேச்சு

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சிறுபான்மையினர் முன்னிலையில் இன்று அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசி உள்ளார். அதில், ஒரு கட்சியுடன் கூட்டணி வைக்கிறோம் என்றால் அவர்களின் கொள்கையை ஏற்றுக்கொண்டோம் என்று அர்த்தம் ஆகிவிடாது. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களின் கொள்கை மாறிவிடாது. எங்கள் கொள்கை அப்படியேத்தான் இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கட்சி இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும் போது கொள்கையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதால் அந்த கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நீங்கள் நினைக்கவேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். சிறுபான்மையினர் முன் அவர் இப்படி பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த நிலையில் பாஜகவால் தனக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி நினைப்பதாக மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

பேட்டி

பேட்டி

ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவை எடப்பாடி அனுமதிக்கவே இல்லை. இதற்கு காரணம், பாஜக இருந்தால் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது. பாஜகவை முடிந்த அளவு ஈரோடு களத்தில் கழற்றிவிடவே எடப்பாடி பார்க்கிறார். மற்றபடி இதில் ஒன்றும் இல்லை. மத ரீதியாக சிறுபான்மையினர் வாக்குகள் போக கூடாது என்று நினைக்கிறார். சிவி சண்முகம் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை என்று இதனால்தான் சொன்னார். தலித் வாக்குகள் கிடைக்கவில்லை என்றும் சிவி சண்முகம் கூறினார். அவரை பாராட்டுகிறேன். அதிமுகவை மத முரண்பாடு மட்டுமல்ல ஜாதிய முரண்பாடும் வீழ்த்திவிட்டது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

அதை சிவி சண்முகம் ஏற்றுக்கொண்டுள்ளார். அதற்காக அவரை பாராட்டுகிறேன். மற்றபடி எடப்பாடி அதிமுகவிற்கு எதிராக சாதி முரண்பாடு இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளவில்லை. வெள்ளாள கவுண்டர்கள் போக மற்றவர்கள் வாக்குகள் நமக்கு கிடைக்கவில்லை என்பதை அவர் உணரவில்லை. அவர் உணரும் தருணம் வரும். 2024ல் எடப்பாடியை சாதி முரண்பாடு தூக்கி அடிக்கும். இதை பார்க்கத்தான் போகிறார்கள். எடப்பாடியை இது சுருட்டி அடிக்க போகிறது. பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக ஐடிவிங் என்னை கிண்டல் செய்யலாம்.

சவால் விடுகிறேன்

சவால் விடுகிறேன்

ஆனால் சவால் விடுகிறேன். இதுதான் நடக்கும். மத முரண்பாடு காரணமாக பிரியும் வாக்குகளை மீண்டும் பெற்றால் 2026ல் ஆட்சிக்கு வர முடியும் என்று எடப்பாடி நினைக்கிறார். இதற்கு முன் திமுக அடைந்த தோல்விகளை வைத்து பார்க்கிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி சாதிய வாக்குகள் பற்றி யோசிக்கவில்லை. மத ரீதியாக பிரியும் வாக்குகளை பற்றி பேசும் அவர்.. சாதி ரீதியாக பிரியும் வாக்குகளை பற்றி அவர் யோசிக்கவில்லை. அதனால்தான் இப்போது பாஜகவை பற்றி பேசாமல் இருக்கிறார். மோடி படத்தையும் பயன்படுத்தாமல் இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+