ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி... கடன் ரத்து ரசீதை விவசாயிகளுக்கு இன்று வழங்குகிறார் முதல்வர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரத்து செய்ததற்கான ரசீது நாளை முதல் வழங்கப்படுகிறது.

சென்னை தலைமை செயலகத்தில், பயிர்க்கடன் ரத்துக்கான ரசீதை விவசாயிகளுக்கு நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

விவசாயிகளுக்கு ரூ.12,110 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்திருந்தார்.

ரூ.12,000 கோடி பயிர்க்கடன் ரத்து

ரூ.12,000 கோடி பயிர்க்கடன் ரத்து

கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,000 கோடி மதிப்புள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.இந்த அறிவிப்பின் மூலம் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும் முதல்வர் அறிவித்தார்.

விவசாயிகள் வரவேற்பு

விவசாயிகள் வரவேற்பு

வறட்சி, காலம் தவறிய மழை, வெள்ளம் போன்ற பல்வேறு இயற்கை பேரிடர்களை விவசாயிகள் சந்தித்து வருகிறார்கள். எனவே விவசாயிகளுக்கு இந்த அறிவிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. விவசாய சங்கத்தின் தலைவர்கள் பலரும் முதல்வர் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 அரசாணை வெளியீடு

அரசாணை வெளியீடு

விவசாய சங்கத்தின் தலைவர்கள் பலரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தும் நன்றி தெரிவித்தனர்.பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. விரைவில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதை விவசாயிகளுக்கு வழங்குவேன் என்று முதல்வர் கூறி இருந்தார்.

ரசீது நாளை வழங்கப்பட உள்ளது

ரசீது நாளை வழங்கப்பட உள்ளது

அதன்படி பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதை விவசாயிகளுக்கு எடப்பாடி பழனிசாமி நாளை வழங்க இருக்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சில விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்த ரசீது வழங்கப்பட உள்ளது.

 முக ஸ்டாலின் குற்றச்சாட்டு

முக ஸ்டாலின் குற்றச்சாட்டு

அதிமுக அரசு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்தது தேர்தல் உள்நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யபப்டும் என அறிவித்ததாகவும், திமுக சொன்னதைதான் தமிழக அரசு செய்துள்ளது என்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+