297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக சார்பாக வெளியிடப்பட்ட 297 தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவை மக்கள் மத்தியில் சென்று சேரவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதிமுகவின் பிரதான வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் பேசப்பட வேண்டும் என்பதற்காகவே எடப்பாடி பழனிசாமி பகுதி பகுதியாக வாக்குறுதிகளை வெளியிட்டு வந்தார். ஆனாலும் அதிமுக தேர்தல் வாக்குறுதிகள் சாமானியர்களிடம் பேசுபொருளாகவில்லை.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 27 நாட்களே இருக்கும் நிலையில், அதிமுக தரப்பில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார். அதற்கு முன்பாகவே ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதி பங்கீட்டை முடித்து, எந்த தொகுதியில் எந்தக் கட்சி போட்டியிடும் என்ற அறிவிப்பையும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

Edappadi Palaniswami

அதேபோல் தொகுதிகள் அறிவிப்பதற்கு முன்னதாக அதிமுகவின் தேர்தல் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுக சார்பாக மொத்தமாக 297 தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை ரூ.2 ஆயிரம், கல்விக் கடன் ரத்து, ஆண்களுக்கும் இலசவ பேருந்து பயணம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வெளியிட்டார்.

அதேபோல் தாலிக்கு தங்கம் திட்டன், தீபாவளிக்கு வேட்டி - சேலை, திருமணத்திற்கு பெண்களுக்கு பட்டு சேலை, ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால், அவர்களின் குடும்பத்திற்கான உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. தற்போது குடும்ப தலைவிகளுக்கு இலவச ஃபிரிட்ஜ், ரேஷன் கடையில் எண்ணெய் மற்றும் பருப்பு இலவசம் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் இப்படியான நேரத்தில் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலசவமாக வழங்குவோம் என்றும் அறிவித்துள்ளார். ஆனால் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் மக்கள் மத்தியில் பேசுபொருளாகவில்லை. அதிமுகவினர் ஜெயலலிதா பிறந்தநாளன்று ஃபிளக்ஸ் அடித்த வைத்த கையோடு அதனை மறந்துவிட்டனர்.

அதிமுக ஐடி விங் சார்பாக வீடு வீடாக சென்று அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை நோட்டீஸாக கொடுக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். ஆனால் ஒரு தொகுதிகளை தவிர வேறு எங்கும் நோட்டீஸ் அளிக்கப்படவில்லை. இதனால் தேர்தல் வாக்குறுதிகளை கூட மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமியால் கொண்டு செல்ல முடியவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+