அதிமுக விருப்ப மனு விநியோகம்.. கால அவகாசத்தை நீட்டித்த எடப்பாடி பழனிசாமி.. என்ன காரணம்?
சென்னை: அதிமுகவில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 23ஆம் தேதியுடன் விருப்ப மனு பெறுவதர்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது தொண்டர்கள், நிர்வாகிகள் கோரிக்கைக்கு ஏற்ப, டிசம்பர் 28 முதல் 31 வரை விருப்ப மனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கின்றன. அந்த வகையில் அதிமுக தரப்பில் ஜூலை மாதமே முன்பாகவே பிரச்சாரம் தொடங்கப்பட்டுவிட்ட சூழலில், தற்போது விருப்ப மனுக்கள் விநியோகம் முடிவடைந்தது.

அதிமுக சார்பாக தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கொடுத்தனர். டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கிய இந்த விருப்ப மனு விநியோகம், டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற்றது. டிசம்பர் 15ஆம் தேதி அதிமுகவினர் பலரும் விருப்ப மனுக்கள் விநியோகம் தொடங்கிய போதே, ஆயிரக்கணக்கானோர் பூர்த்தி செய்து கொடுத்தனர்.
ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அதிமுக விருப்ப மனுக்கள் விநியோகம் குறைந்தது. இதனை கவனித்த எடப்பாடி பழனிசாமி, 2021 சட்டசபைத் தேர்தலை விடவும் கூடுதலாக விருப்ப மனுக்கள் அளிக்கப்பட வேண்டும் என்று மறைமுகமாக உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியே 234 தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் ஐடி விங் நிர்வாகிகள் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தனர்.
இதன்பின் விருப்ப மனுக்கள் விநியோகம் முடிவடைந்த சூழலில், தற்போது மீண்டும் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி, விருப்ப மனுக்கள் பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தர வேண்டும் என்று நிர்வாகிகள், தொண்டர்கள் கோரிக்கை வைத்ததன் பெயரில், கால அவகாசம் நீக்கப்படுகிறது.
டிசம்பர் 28 முதல் டிசம்பர் 21 வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக அதிமுகவில் இருந்து இன்னும் பலரும் விருப்ப மனுக்கள் அளிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி தயார் செய்து வருவதாகவும் விவரம் அறிந்தவர்கள் சிலர் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications