குடும்ப தலைவிகளுக்கு பிரிட்ஜ் இலவசம்.. அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட எடப்பாடி!
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு ஃபிரிட்ஜ் இலவசமாக வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மொத்தமாக 297 வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷனில் இலவசமாக பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடக்கவுள்ளது. இதனையொட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி நாளை முதல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில் அதிமுக சார்பாக தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி முழுமையாக வெளியிட்டுள்ளார். ஏற்கனவே 3 கட்டங்களாக பல்வேறு வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிமுக சார்பாக 297 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு இலவசமாக ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷனில் ஒரு கிலோ பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் இலவசமாக அளிக்கப்படும். அதேபோல் மாநிலங்களுக்கான மத்திய நிதி பகிர்வை உயர்த்தி வழங்க வலியுறுத்துவோம். அதேபோல் அரசு நிலங்களில் நீண்ட காலம் வசித்து வருபவர்களுக்கு பட்டா வழங்கப்படும்.
மகளிர் இருசக்கர வாகனம் வாங்குவதற்கு ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும். அதேபோல் 12வது படித்துவிட்டு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த படிப்படியாக மதுக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10% உயர்த்தப்படும் என்றும், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன் தள்ளுப்படி செய்யப்படும் என்றும், மீனவர்கள் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்றும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்றும், இளைஞர்கள் தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படும் என்றும், வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் வகையில் சட்டம் இயற்றப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
-
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?












Click it and Unblock the Notifications