ஆதவ் அர்ஜுனா மாமியாரிடம் ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி.. பகீர் கிளப்பிய கேசி பழனிசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் அதிமுகவில் இணைந்த 2 மாதத்திலேயே லால்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு வழங்கி உள்ளார். இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி, ரூ.300 கோடி வரை லீமா ரோஸிடம் வாங்கி கொண்டு தான் இந்த வாய்ப்பை வழங்கி உள்ளதாக கேசி பழனிசாமி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி கேசி பழனிசாமி 'ஒன் இந்தியா' தமிழ் சேனலுக்கு சிறப்பு பேட்டியளித்தார். அப்போது பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். இதுதொடர்பாக கேசி பழனிசாமி கூறியதாவது:

edappadi-palaniswami-gets-rs-300-cr-from-edappadi-palaniswami-says-kc-palainswamy

மார்ட்டினை மிரட்டிய ஜெயலலிதா

இன்றைக்கு 2 திராவிட கட்சிகளுமே மிக வசதியானவர்களை தேடி செல்கிறது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கள்ள லாட்டரி சீட் வியாபாரத்தால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று மார்ட்டினை ஓராண்டு ஜாமீனுக்கு அப்ளிகேஷன் போட்டால் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கைது செய்து சிறையில் வைத்து விடுவேன்.

நான் சொல்லும் வரைக்கும் மன்னித்து விடும் வரை, திருந்தும் வரை, கள்ள லாட்டரி விற்பனை முடியும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்று வைத்திருந்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் ஜெயலலிதா காலத்தில் சொல்லப்பட்டு இருக்கலாம். அதற்கு சசிகலா கூட காரணமாக இருந்திருக்கலாம்.

சப்பைக்கட்டு காரணம் கூட இல்லை

ஆனால் கள்ள லாட்டரி சீட்டு விற்பனையில் உறுதியாக செயல்பட்டார். அந்த கள்ள லாட்டரி சீட்டு விற்பனை செய்த மார்ட்டின் மனைவி (லீமா ரோஸ்) ஐஜேகே (இந்திய ஜனநாயக கட்சி) கட்சியில் பெயரளவுக்கு உறுப்பினராக தொடர்ந்தார்.

அந்த கட்சி அதிமுக கூட்டணியில் இருக்கிறது. இதனால் அந்த கட்சியில் அவருக்கு ஒரு சீட்டு கொடுத்து இருந்தாலும் கூட சப்பைக்கட்டு கட்டுவதற்காக காரணம் உள்ளது. ஆனால் 2 மாதத்துக்கு முன்பாக அந்த அம்மையாரை (லீமா ரோஸ்) கட்சியில் சேர்த்து லால்குடி வேட்பாளராக்கி உள்ளார். புதுச்சேரியில் பாஜக கூட்டணியில் மார்ட்டின் மகனுக்கும், அதிமுகவிற்கும் தலா 2 சீட் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.300 கோடி வாங்கிய எடப்பாடி

கருணாநிதிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் மார்ட்டின். 2021 சட்டசபை தேர்தலில் மார்ட்டின் தேர்தல் பத்திரத்தில் ரூ.500 கோடிக்கு மேல் கொடுத்துள்ளார். அப்படிப்பட்ட மார்ட்டின் மனைவி இன்று அதிமுகவின் வேட்பாளர். எதிர்காலத்தில் எம்எல்ஏக்களை 50 கோடி கொடுத்து வாங்கக்கூடிய வல்லமை கொண்டவர். மார்ட்டின் மனைவியால் எம்எல்ஏக்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களையும் விலைபேசி வாங்கி விட முடியும்.

ஒரு கட்சியையே வாங்கி கொள்ளக்கூடிய அவலநிலையை எடப்பாடி பழனிச்சாமி அரங்கேற்றி உள்ளார். ஒரு கட்சியை வாங்குவதற்கான திறவுகோலை திறந்து விட்டுள்ளார் எடப்பாடி. நிச்சயமாக பணம் கொடுக்காமல் எடப்பாடி இதை செய்திருக்க மாட்டார். பல பத்திரிகை செய்திகளில் ரூ.300 கோடி அவர் கொடுத்துள்ளதாக சொல்கிறது'' என்றார். கூடுதல் விவரங்களை கீழே உள்ள வீடியோ பார்த்து அறிந்து கொள்ளலாம்.

லால்குடியில் வாய்ப்பு

லால்குடி வேட்பாளராக லாட்டரி அதிபர் மார்ட்டின் மனைவி லீமா ரோஸ் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த பிப்ரவரி 9ம் தேதி லட்சிய ஜனநாயக கட்சியில் இருந்து விலகி பிப்ரவரி 17ல் அதிமுகவில் இணைந்தார். உடனடியாக அவருக்கு மகளிர் அணி இணைச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிச்சாமி வழங்கியிருந்தார்.

லீமா ரோஸ் தவெகவில் செயல்பட்டு வரும் ஆதவ் அர்ஜுனாவின் மாமியாராவார். இந்நிலையில் தான் அவரிடம் ரூ.300 கோடியை வாங்கி கொண்டு எடப்பாடி பழனிசாமி சீட்டு கொடுத்துள்ளதாக கேசி பழனிச்சாமி குற்றம்சாட்டி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+