அதிமுகவை நாசம் செய்துவிட்டார் எடப்பாடி! தீர்ப்பே புரியாமல் பேசக்கூடாது! பெங்களூர் புகழேந்தி சரவெடி!
சென்னை: அதிமுகவை எடப்பாடி பழனிசாமி நாசம் செய்துவிட்டார் என்றும் கட்சியின் சின்னம், பெயர், கொடி, உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீது அளிக்கப்பட்ட தீர்ப்பு தவறாக சித்தரிக்கப்படுகிறது எனவும் பெங்களூர் புகழேந்தி கூறியிருக்கிறார்.
எடப்பாடி தரப்பைச் சேர்ந்த 3 வழக்கறிஞர்கள் நீதிமன்றம் சொல்லாததை எல்லாம் சொல்லி பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள் என்றும் அதில் ஒரு வழக்கறிஞர் வழக்கு மன்றத்திற்கு செல்கிறாரா? என்பதே சந்தேகம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பெங்களூர் புகழேந்தி கூறியிருப்பதாவது;

''இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்றைய தினம் வழங்கிய தீர்ப்பை சரியாக புரிந்து கொள்ளாமல் அதனை வேறு விதமாக சித்தரித்து தவறாக கூறி வருகின்றனர். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மிகத் தெளிவாக, வழக்கு நிலுவையில் உள்ள நீதிமன்றத்தை அணுகச் சொல்லி, அங்கே மனு தாக்கல் செய்ய சொல்லி தான் உத்தரவிட்டிருக்கிறது. ஏற்கனவே எங்களது தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வில்லை என்று சொல்லி தான் நீதிபதி அவர்கள் கொடியையும் கட்சி பெயரையும் பயன்படுத்தக் கூடாது என்று இடைக்கால ஆணையை பிறப்பித்து இருந்தார்கள்.
அந்த ஆணை பின்னர் வழக்கு வந்த போது நீடிக்கப்படவில்லை. அதில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து தான் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேல்முறையீடு செய்தோம். அவர்கள் வழக்கு நிலுவையில் உள்ள அதே நீதிமன்றத்தை அணுகி மனுவை தாக்கல் செய்யலாம் நிவாரணம் பெறலாம் என்கிற தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.
தனி நீதிபதி அவர்கள் முன்னிலையில் வழக்கு இன்றும் நிலுவையில் இருக்கும் போது இந்த தீர்ப்பை தான் இரண்டு பேர் கொண்ட அமர்வு நீதிமன்றம் வழங்க முடியும். இதைத்தான் எங்களது வழக்கறிஞர்களும் மேல்முறையீட்டில் கேட்டிருந்தோம்.
தனி நீதிமன்றத்தை அணுகி மனு தாக்கல் செய்யலாம் என்று கூறிய தீர்ப்பை எங்களுக்கு எதிரான தீர்ப்பாக மாற்றி எப்பொதும் போல எதிரிகள் குளிர் காய்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் "கருப்பு கோட்டை போடுவது பொய் சொல்வதற்காக அல்ல உண்மையை நிலை நிறுத்த வேண்டும்" என்பதற்காக என்று சொல்லுவார்கள்.
இன்று காலையில் எடப்பாடி தரப்பைச் சேர்ந்த மூன்று வழக்கறிஞர்கள் அளவே இல்லாமல் நீதிமன்றம் சொல்லாததை எல்லாம் சொல்லி பொய்களை அவிழ்த்து விடுகிறார்கள்.அதில் ஒரு வழக்கறிஞர் வழக்கு மன்றத்திற்கே செல்கிறாரா? என்பதே சந்தேகமாக இருக்கிறது. அவர் தேர்தல் ஆணையம் கூட எல்லாவற்றையும் பழனிசாமிக்கு கொடுத்து விட்டதாக ஒரு பச்சை பொய்யை சொல்லுகிறார். வேடிக்கையாக இருக்கிறது.
ஆகவே தனிநீதிமன்றத்தை அணுகுகிறோம்.மனு தாக்கல் செய்கிறோம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் தீர்ப்பும் 19ஆம் தேதி எதிர்பார்க்கிறோம். இதில் ஒரு வழக்கறிஞர் கழக ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் கழகத்தை நாசம் செய்து விட்டதாக சொல்கிறார். ஏதோ இன்னும் கழகம் இவர்கள் வைத்திருப்பது போலவும், அது நாசமாகாமல் இருப்பது போலவும், அவர் கூறியிருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அவர்களும் நாசம் செய்து முடித்து விட்டார்கள். அதை மீட்டெடுக்கும் பணியில் தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம்.
ஊரையும் உலகத்தையும் பொய் சொல்லி ஏமாற்ற முடியாது என்பதை இவர்கள் உணர வேண்டும். தீர்ப்பு எந்த விதத்திலும் அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு பாதகமாக இல்லை. எங்களுக்கும் பாதகமாக இல்லை, என்பதை மிகவும் தெளிவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன். அதை தெளிவுபடுத்திருக்கிறேன்.''
-
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
அதிமுகவில் உடைந்த அடுத்த செங்கல்.. சனிக்கிழமை பனையூரில் மெயின் புள்ளி! இவரா? பரபர புதுக்கோட்டை! -
அடுத்த விக்கெட் போச்சு! ராஜினாமா செய்தார் அதிமுக எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர்! விழிபிதுங்கும் இபிஎஸ் -
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
Sengottaiyan: செங்கோட்டையன் எம்எல்ஏ பதவிக்கு சிக்கல்? ஹைகோர்ட்டில் அதிமுக வேட்பாளர் வழக்கு! -
அதிமுக என்னும் மாபெரும் மதில் இடியும் போதும்.. மௌனம் காக்கும் எடப்பாடி.. ஒரு வார்த்தை பேசலையாமே! -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
இனிதான் ஆரம்பம்.. விஜயபாஸ்கர் பலே திட்டம்.. வெளியான ஆடியோ -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications