Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சவக்குழியில்..! எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதலே தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. தமிழகத்தில் தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும், பெருகி வரும் போதைப் பொருள் புழக்கம் குறித்தும் அறிக்கைகள் வாயிலாகவும், ஊடகப் பேட்டிகள் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் தொடர்ச்சியாகத் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வந்தும், இதுவரை விடியா அரசின் காவல்துறை எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ''

Edappadi Palaniswami has made sensational allegations that law and order has been buried in Tamil Nadu

''நாள்தோறும் செய்தித் தாள்களில் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் குறித்த செய்திகளே அலங்கரித்த வண்ணம் உள்ளன. "தினசரி நாளிதழ்களைப் படியுங்கள்" என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் இந்த விடியா அரசின் பொம்மை முதலமைச்சர், தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி தவிர்த்து எந்த நாளிதழையும் படிப்பதாகத் தெரியவில்லை. படித்திருந்தால், தனது அலங்கோல விடியா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சவக்குழியில் இருப்பதை நிச்சயம் உணர்ந்திருப்பார். அந்த வகையில், இந்த வாரம் நிகழ்ந்த சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளில் முக்கியமான சிலவற்றை நான் சுட்டிக்காட்ட விழைகிறேன். ''

*சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகில் உள்ள கல்லுக்குழி கிராமத்தில் முதியோர், பெண், 15 வயது சிறுமி, 12 வயது சிறுவன் என்றுகூடப் பாராமல், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு, அவர்களுடைய வீட்டில் இருந்த நகை, பணம் கொள்ளையடிப்பு.

*சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே, சாணாரப்பட்டி பகுதியில் தனியாக இருந்த பெண் கொடூரமாகக் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு 10 சவரன் நகை கொள்ளையடிப்பு.

*திருப்பூர் மாவட்டம், பல்லடம் NEWS 7 தமிழ் செய்தியாளர், மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை இருப்பதாக, தொடர்ச்சியாக காவல் துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணி நேரங்களுக்கு முன்பே தெரிவித்து பாதுகாப்பு கேட்டும், காவல் துறை மெத்தனப் போக்கோடு இருந்ததன் விளைவாக கொலைவெறித் தாக்குதல்;

*திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே முதியவர் கை துண்டாக வெட்டிப் படுகொலை; ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் மூதாட்டி ஒருவர் மீது கொடூரமான முறையில் தலையில் கல்லைப் போட்டுப் படுகொலை செய்யப்பட்டு, அவரது நகை கொள்ளையடிப்பு;

''இதுமட்டுமன்றி, பிற மாநிலங்களைச் சேர்ந்த கொள்ளையர்களின் ஊடுருவலும், குற்றச் செயல்களும் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுபோன்ற தொடர் நிகழ்வுகளால் தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்றைக்கு பொதுமக்கள் வெளியில் நடமாடவே அச்சப்படுகின்ற ஒரு அவல நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், பெண்கள், முதியோர், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள், அரசு ஊழியர்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவி வருகிறது.''

''இதுபோன்ற குற்றச் செயல்கள் அதிகரிக்க, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கமும் ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. தமிழகத்தில் அதிகரிக்கும் போதைப் பொருள் புழக்கம் குறித்து நான் தொடர்ச்சியாக எச்சரித்துக்கொண்டே இருக்கிறேன் என்பதனாலே, போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதற்கு "ஆபரேஷன் கஞ்சா" ஆரம்பித்ததாகச் சொன்ன தமிழகக் காவல் துறை DGP, 2.ஒ, 3.ஓ, 4.ஓ என “ஒ" மட்டுமே
போட்டாரே தவிர, போதைப் பொருள் புழக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை.''

''எனது தலைமையிலான கழக ஆட்சி இருந்தபோது, குற்றச் செயல்களில் ஈடுபட நினைக்கவே அச்சப்படும் வண்ணம், மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் சட்டம்-ஒழுங்கை சிறப்புறக் காத்து வந்த தமிழகக் காவல் துறை, இந்த விடியா திமுக ஆட்சியில், சமூக விரோதிகள் எந்தவித அச்சமோ, தயக்கமோ, சட்ட நடவடிக்கை மீதான பயமோ இன்றி குற்றச் செயல்களில் ஈடுபட, பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களைப் போலவே கும்பகர்ண தூக்கத்தில் இருப்பது வருத்தத்திற்கும், கடும் கண்டனத்திற்கும் உரியது.''

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+