விதை நெல்லுக்கே காசு இல்ல.. நீர் திறப்பதற்கு முன் விதை, உரம் கொடுங்க.. அரசுக்கு எடப்பாடி கோரிக்கை!
சென்னை: சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு முன் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் போன்ற இடுபொருட்கள் மற்றும் வங்கிக்கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது. இந்நிலையில், காவிரியிலிருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு முன் விவசாயிகளுக்கு தேவையான விதை நெல், உரம் போன்ற இடுபொருட்கள் மற்றும் வங்கிக்கடன் வழங்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, கர்நாடக காங்கிரஸ் அரசு மற்றும் மத்திய அரசுடன் ரகசியமாக கைகோர்த்து காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய உரிய பங்கு நீரை முறையே வலியுறுத்திப் பெறாமல், டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் மட்டுமே இழைத்து வருகிறது. இதனால், டெல்டா பாசன விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தை அடைந்து வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக காவிரியில் போதிய தண்ணீர் திறந்துவிடப்படாததால், குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் போதிய தண்ணீர் இல்லாமல், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் பெரிதும் நஷ்டமடைந்தனர். குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு செய்யப்படாததால், விவசாயிகள் உரிய நிவாரணமும் பெற இயலவில்லை.
சம்பா தாளடி காலங்களில் ஒருபுறம் நீரின்றி பயிர் கருகியது, மறுபுறம் மழை வெள்ளத்தால் பாதிப்பும் ஏற்பட்டது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை காலத்தே திறக்காததால், அறுவடை செய்த பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து, முளைத்து பாதிக்கப்பட்டதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வெளிவந்தன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவராணமும் திமுக அரசு முழுமையாக வழங்கவில்லை. நடப்பாண்டில் 2024-2025, கூட்டாளியான கர்நாடக காங்கிரஸ் அரசிடம் காவிரியில் போதியத் தண்ணீரை பெறாததாலும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடாததாலும், மும்முனை மின்சாரம் வழங்கப்படாததாலும் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.
கடந்த ஒரு வார காலமாக இயற்கையின் கருணையால் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் கடுமையான மழை பெய்து வருவதால், கர்நாடக அரசு வேறு வழியின்றி உபரி நீரை காவிரியில் திறந்து விடுகிறது. அதன் காரணமாக மேட்டூர் அணை வெகு வேகமாக நிரம்பி வருகிறது. 27.7.2024 அன்று 100 அடியை தாண்டியுள்ளது. எனவே, சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்துகிறேன்.
கடந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்து விட்டதால், பயிர் கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயிகளுக்கு பயிர் கடன் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்தியிருந்தேன். சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு நடப்பு பருவத்திற்கு பயிர் கடன் வழங்கப்படமாட்டாது என்ற அச்சத்தில் டெல்டா விவசாயிகள் உள்ளனர். எனவே, இவ்வாண்டு சம்பா சாகுபடிக்கு, சென்ற ஆண்டு பயிர் கடன் கட்டத் தவறிய விவசாயிகளுக்கு, எந்த நிபந்தனையுமின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
மேலும், காவிரியில் திறக்கப்படும் தண்ணீர் குளம், குட்டை மற்றும் கடைமடை பகுதிகள் வரை செல்ல ஏதுவாக வாய்க்கால்கள், மதகுகளை பழுது நீக்கி சரி செய்யவும், கரைகளை பலப்படுத்தவும் வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications