வெற்றி வாய்ப்பு எப்படி? அதிமுக மா.செக்களுக்கு திடீர் அழைப்பு விடுத்த எடப்பாடி.. பரபரத்த ராயப்பேட்டை
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் கள நிலவரம், வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது , தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.
தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதங்களுக்கும் மேலாக தேர்தல் களம் அனல் பறந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே ஆரம்பித்த இந்த பரபரப்பு தேர்தல் முடியும் வரை நீடித்தது. தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரசாரம் என கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தமிழ்நாட்டில் தேர்தல் களம் களை கட்டியிருந்தது.

கடந்த 19 ஆம் தேதி தேர்தல் முடிந்த பிறகு திருவிழா முடிந்த பிறகு அமைதியாக காணப்படும் ஊர் போல தேர்தல் களம் மாறிவிட்டது. ஓய்வு இல்லாமல் பிரசாரத்தில் சுற்றி வந்த அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகளால் அரசியல் களம் அனல் பறந்தது. தற்போது சற்று பரபரப்பு இன்றி தமிழக அரசியல் களம் உள்ளது. இந்த நிலையில்தான், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் கள நிலவரம், வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது , தேர்தல் பணிகள் உள்ளிட்டவை குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 9 மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், வட சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்க்ளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார்.
மீதமுள்ள மாவட்ட் செயலாளர்களுடன் வரும் நாட்களில் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது. தேர்தல் பணிகளில் என்ன மாதிரியான பிரச்சினை இருந்தது போன்றவை தொடர்பாக ஒவ்வொரு தொகுதியிலும் எவ்வளவு வாக்குகள் வரை அதிமுகவிற்கு கிடக்கும் என்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி ஆலோசிப்பதாக தெரிகிறது.
அதேபோல், சசிகலா தற்போது அதிமுக தொண்டர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். தவறு செய்தவர்கள் திருந்தி நம்மிடம் வர வாய்ப்பு இருக்கிறது என்று சசிகலா கூறியுள்ள நிலையில், இது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. லோக்சபா தேர்தல் முடிந்த சில நாட்களில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்து ஆலோசனை நடத்தியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய அதிமுக இந்த முறை தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. பாஜக கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்து போட்டியிட்டது. தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக தங்கள் பக்கம் வரும் என்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறி வருகிறார். இதே கருத்தை டிடிவி தினகரனும் கூறி வருகிறார் என்பது கவனிக்கத்தக்கது.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications