Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திணறும் எடப்பாடி.. "என்ன பண்றதுன்னே தெரியல".. சுழற்றியடிக்கும் "சீனியர்" பஞ்சாயத்து.. இதுதான் தீர்வா

எடப்பாடி பழனிசாமி சீனியர்களை சமாளிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் அதிமுக 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த தோல்விக்கு கட்சியின் சீனியர்களே காரணம் என்று சொல்லப்படுகிறது. கட்சியின் சின்னம் கைக்கு கிடைத்திருக்கும் நிலையில் எப்படி சீனியர்களை சமாளித்து கட்சியை எடப்பாடி பழனிசாமி வழிநடத்தப்போகிறார் என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுகவில் மொத்தம் 75 மாவட்ட செயலாளர்கள் இருக்கின்றனர். இதில் 40 மாவட்ட செயலாளர்கள் முன்னாள் எம்எல்ஏ உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்திருக்கிறார்கள். ஆனால் மீதமுள்ள 20 மாவட்ட செயலாளர்கள் இதே பொறுப்பில் பல ஆண்டுகாக இருந்து வருகிறார்கள். இவர்கள் பிரச்னை கிடையாது. ஆனால் இவர்களை கையில் வைத்திருக்கிருக்கும் முக்கிய தலைகள்தான் எடப்பாடியுடன் ஒத்துழைக்க மறுத்து வருகிறார்கள். இந்த சம்பவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டுதான் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல்!

இத்தனை நாட்களாக சின்னத்திற்காக அடித்துக்கொண்டிருந்த நிலை மாறி சின்னம் தேர்தலுக்கு முன்னரே கைவசமாகியது. அதேபோல கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்பதையும் நீதிமன்றம் அங்கீகரித்தது. இப்படி இருக்கையில் தேர்தலில் எளிதில் வெற்றி பெற்று தனது தலைமையை நிரூபித்துவிடலாம் என எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த திட்டம் கடைசி வரை வெறும் திட்டமாகவே முடிந்துவிடும் என்று அவருக்கு தெரிந்திருக்கவில்லை.

ஜெயலலிதா ஆட்சியில்

ஜெயலலிதா ஆட்சியில்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது அவரை எதிர்த்து பேச யாருக்கும் தைரியம் இருக்காது... ஏனெனில் எங்கே எப்போது யாருடைய பதவி பறிக்கப்படும் என்பதே தெரியாத சூழல் இருந்தது.. அந்த அளவுக்கு கட்சியும் கட்டுப்பாடாக இருந்தது. ஆனால் எடப்பாடி வந்த பின்னர் இந்த கட்டுப்பாட்டில் 'கருந்துளை' அளவுக்கு மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பதாக கட்சியின் நலன் விரும்பிகள் கூறுகின்றனர். இதனிடையே இன்னொரு தகவலும் கசிந்து வருகிறது.. அதாவது, ஈரோடு இடைத்தேர்தலுக்கு எடப்பாடி தயாராக இருக்க மற்ற சீனியர்களிடம் அந்த உத்வேகம் காணப்படவில்லையாம்.. காரணம், "எடப்பாடி தன்னை நிரூபிக்க வேண்டி இதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் நாங்கள் ஏன் இதில் தலையிட்டு டென்ஷன் ஆக வேண்டும்? எங்களுக்கு இதில் லாபம் என்ன?" என்று கேட்டு ஒதுங்கிக்கொண்டு வருகிறார்களாம்.

இடைத்தேர்தல்

இடைத்தேர்தல்

அது மட்டுமல்லாது, எடப்பாடி இந்த பொறுப்புக்கு வர காரணமாக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன் போன்றோரை அவர்தான் காலி செய்ததாக சொல்லப்படும் நிலையில், நாங்கள் எதற்கு இவருக்காக உழைக்க வேண்டும்? என்றும் சீனியர்கள் சிலர் கேள்வியெழுப்பி வருகிறார்களாம்.. மேலும், தங்களுக்கென சில மாவட்ட செயலாளர்களை கையில் வைத்துக்கொண்டு சீனியர்கள் எந்த விஷயத்திலும் ஆர்வம் காட்டாமல் மெத்தனமாக இருப்பது 'எடப்பாடியார்' எனும் பிம்பத்தை கட்டமைப்பதில் சுணக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. எனவே இதனை அவர் எப்படி கையாளப்போகிறார் என்கிற கேள்வியும் தற்போது எழுந்திருக்கிறது.

 சிக்கல்

சிக்கல்

ஒருவேளை அவசரப்பட்டு இந்த சீனியர்கள் மீது நடவடிக்கை எடுத்துவிட்டால் அது எடப்பாடிக்கே 'பேக் பயராக' மாறிவிடுமே என்ற கலக்கமும் உள்ளதாம்.. ஏனெனில், தன்னை எதிர்த்தவர்கள் டெபாசிட்டே பெறக்கூடாது என்று திமுக தலைமை 'கரண்ட்' அமைச்சரை கொங்கு மண்டலத்தில் இறக்கியிருந்தது. தற்போது இந்த அமைச்சருக்கு புதிய அசைன்மெண்ட் வேறு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது அதிருப்தியில் இருக்கும் 'சிட்டிங்' தலைகளை கட்சிக்குள் கொண்டுவருவதுதான் இந்த அசைன்மெண்ட். இப்படி இருக்கும்போது கட்சியின் சீனியர்களை பகைத்துக்கொண்டால் சரியாக இருக்காது என எடப்பாடி மௌனமாக இருந்து வருகிறாராம்.

 தீர்வு

தீர்வு

இப்படியே மௌனமாக இருந்தால் எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் கட்சிய கடும் பின்னடைவை சந்திக்க நேரிடும் என்பதை எடப்பாடி தரப்பு உணராமல் இல்லை.. எனவே இதனை சரி செய்ய எடப்பாடி உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என கட்சி தலைமையிடம் சில நலம்விரும்பிகள் வலியுறுத்தியுள்ளார்களாம்.. பொதுச் செயலாளர் தேர்தல் நடத்தி அதில் பதவியை முழுமையாக தக்க வைத்தால் மட்டுமே இதற்கு தீர்வு காணமுடியும் என்றும், அதுவரை சீனியர்கள் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி கொஞ்சம் விட்டுப்பிடிக்கதான் வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+