Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிளான் போட்டு தவறு செய்த ஈபிஎஸ்? அவைத்தலைவர் ஆக்‌ஷனே அதுக்குதானாம்.. அரசியல் விமர்சகர் சொல்லும் சேதி

அவைத்தலைவர் நடுநிலை வகிக்காமல் ஈபிஎஸ் சார்பு நிலை எடுத்தார், அந்த தவறை எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டே செய்தது என அரசியல் விமர்சகர் கலை கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை : ஈபிஎஸ் தொடர்ந்த இடையீட்டு மனுவில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, பிரதான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாட்டைச் சொல்வதாக இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் சொல்வதை மறுத்துள்ள அரசியல் விமர்சகர் கலை, இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சிக்கு சின்னம் அவசியம் என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றம் சொன்ன தற்காலிக தீர்வுதான் இது என்றும், இது பிரதான வழக்கில் தாக்கம் செலுத்தாது என்றும் தெரிவித்துள்ளார்.

மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் - அரசியல் விமர்சகர் கலை ஆகிய இருவரும் நமது ஒன் இந்தியா தமிழ் விவாத நிகழ்வில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வத்தின் நகர்வுகள் குறித்து விவாதித்துள்ளனர்.

அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலையாகச் செயல்படாமல் ஈபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டோடு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதே, அதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் களமிறங்குவார் என்றுதான் என கலை தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தது முதல் தொடர் தோல்விகளையே அதிமுக சந்தித்தது. அடுத்தடுத்த தேர்தல்கள் தான் அவரை நிலைநிறுத்த வேண்டும், இடைத்தேர்தலை வைத்து எந்த முடிவுக்கும் வரமுடியாது என்ற பார்வை முன்வைக்கப்படுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

 பொதுக்குழு அதிகாரம்

பொதுக்குழு அதிகாரம்

அரசியல் விமர்சகர் கலை : அதிமுக உட்கட்சி விதி 20/2ன் படி பொதுச் செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்யவேண்டும். அந்த விதியைத் தவிர மற்ற அனைத்து விதிகளை திருத்தவும், மாற்றவும், நீக்கவும் பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. பொதுச் செயலாளர் எடுக்கும் முடிவுகளை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும். இல்லையென்றால் அது செல்லாது. பொதுச் செயலாளருக்கு அதிகாரங்கள் இருந்தாலும், அவரே பொதுக்குழுவுக்கு கட்டுப்பட்டவர் தான்.

பத்திரிகையாளர் ப்ரியன் : ஐகோர்ட் தனி நீதிபதி விசாரணையின்போது, பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டியது அவசியமில்லை என்ற உத்தரவைச் சொன்னார். ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை பொதுக்குழுவால் நீக்க முடியாது என்பது ஓபிஎஸ் தரப்பின் வாதம்.

 செல்லாது

செல்லாது

அரசியல் விமர்சகர் கலை : அதிமுகவில் தேர்தல் நடத்துவதற்கு 3 திருத்தங்களை மேற்கொண்டார்கள். அந்த திருத்தங்களை பொதுக்குழு ஏற்றுக்கொள்ள வேண்டும். உடனடியாக அடுத்து நடக்கும் பொதுக்குழுவில் ஏற்றுக்கொண்டால் தான் அது செல்லுபடியாகும். அப்படி பொதுக்குழு அதனை அங்கீகரிக்கவில்லை என்றால் அந்த திருத்தங்களின் அடிப்படையில் நடந்த தேர்தல்கள் செல்லாது. அந்த அடிப்படையிலேயே ஓபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் செல்லாது என ஐகோர்ட் பெஞ்ச் முடிவுக்கு வந்தது.

 ஈபிஎஸ்ஸுக்கு சாதகம்?

ஈபிஎஸ்ஸுக்கு சாதகம்?

ப்ரியன் : சுப்ரீம் கோர்ட் இந்த இடையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ள தீர்ப்பு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மனநிலையை பிரதிபலிக்கும் விஷயமாகப் பார்க்கிறேன். ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு செல்லாது என்கிறார் ஓபிஎஸ். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், தன்னை நீக்கியதும் செல்லாது என்கிறார். ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, பொதுக்குழுவை மையப்படுத்தியே இருக்கிறது. பொதுக்குழுவை அங்கீகரிப்பதாகவே இருக்கிறது. அவைத்தலைவருக்கு அதிகாரம் வழங்குவதாகவே இருக்கிறது. எனவே, பிரதான வழக்கிலும் பெரும்பாலும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்பாகவே அமைய வாய்ப்பிருக்கிறது.

 எதிர்த்திருக்க வேண்டும்

எதிர்த்திருக்க வேண்டும்

கலை : இந்த இடையீட்டு மனு உத்தரவு பிரதான வழக்கை பாதிக்காது என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் மனநிலை என்னவென்றால், இடைத்தேர்தலில் ஒரு பிரதான எதிர்க்கட்சிக்கு சின்னம் அவசியம் வேண்டும் என்பதைத்தான் பார்த்தார்கள். 2 பேரும் போட்டி போடுவதால் இருவரும் இணைந்து ஒத்த முடிவை எடுக்க முடியாது என்ற முடிவுக்கு நீதிமன்றம் வருவதால் அதற்கு ஒரு தற்காலிக தீர்வு வேண்டும் என்ற அடிப்படையில் பொதுக்குழு முடிவெடுக்கட்டும் என உத்தரவிட்டது. பொதுக்குழுவை அங்கீகரிக்கும் இந்த தீர்ப்பை ஓபிஎஸ் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், எதிர்த்தால், இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும், இந்த தீர்ப்பு நம்மையும் உள்ளடக்கி சாதகமாக வந்துள்ளது என்ற மகிழ்ச்சியில் அதனை ஏற்றுக்கொண்டது ஓபிஎஸ் தரப்பு.

 ஈபிஎஸ் திட்டமிட்டே தவறு செய்தார்

ஈபிஎஸ் திட்டமிட்டே தவறு செய்தார்

கலை : எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நியாயமாக இரு தரப்பு வேட்பாளர் பெயர்களையும் குறிப்பிட்டு வேட்பாளர் தேர்வு படிவங்களை வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தவறாக பயன்படுத்தி அவைத்தலைவர், நடுநிலை வகிக்காமல் எடப்பாடி பழனிசாமி சார்பு நிலை எடுத்தார். அவரது தரப்பு வேட்பாளர் பெயரை மட்டும் படிவத்தில் குறிப்பிட்டார். அந்த தவறை எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டே செய்தது. அதை எதிர்த்து ஓபிஎஸ் அதிரடி முடிவெடுப்பார் என்று எதிர்பார்த்தார் ஈபிஎஸ். ஆனால், ஓபிஎஸ் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு எதிராக களமிறங்கவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+