எடப்பாடி பழனிசாமியின் MASTER CLASS! அதிமுக ஐடி விங் மீது தனி ஃபோகஸ்! அடுத்த 3 மாத காலம் முக்கியம்!
சென்னை: அதிமுகவுக்காக உழைப்பவர்களுக்கு நிச்சயம் உரிய அங்கீகாரம் கிடைக்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
சென்னையில் இன்று நடைபெற்ற அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியின் புதிய மாநில, மண்டல நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு ''மாஸ்டர் கிளாஸ்'' என்ற தலைப்பில் பாடமெடுத்த அவர் இதனைக் கூறினார்.

மேலும், அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்பது தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் இதனால் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் எதற்காகவும், யாருக்காகவும் அஞ்ச வேண்டாம் எனவும் தைரியம் கொடுத்திருக்கிறார். இதனிடையே மற்ற கட்சிகளின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் போல வெறுப்பை பரப்ப வேண்டாம் என பாஜக, திமுக ஐடி விங்குகளை போகிற போக்கில் சூசகமாக விமர்சித்தார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்படும் அதிமுகவினர், யாரையும் மரியாதை குறைவாகவோ நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்கக்கூடாது எனவும் எடப்பாடி பழனிசாமி கட்டளையிட்டுள்ளார். அதேபோல் அடுத்து வரும் 3 மாதகாலமும் மிகவும் முக்கியம் என்பதையும் அவர் தனது உரையின் போது சுட்டிக்காட்டியிருக்கிறார்.
மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும், திமுக அரசு செய்யும் தவறுகளையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். இதனிடையே இன்று நடைபெற்ற MASTER CLASS நிகழ்ச்சி குறித்து அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநில நிர்வாகி ராஜ் சத்யன் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''புரட்சித்தமிழரின் நேரடி வழிகாட்டுதலில் செயல்படும் கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில, மண்டல நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்று பேருரையாற்ற ஒப்புதல் அளித்தமைக்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு பணிவான நன்றியினையும், அண்ணன் அவர்களை அதிமுக ஐடி விங் சார்பில் வருக! வருகவென வரவேற்பதிலும் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.''
''கழகத்தின் தொடக்க காலத்திலிருந்தே கிளைக் கழகம் முதல் கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பணியாற்றி, பல்வேறு கடுமையான தேர்தல்களை எதிர்கொண்டு, மக்களுடன் நின்று களப்பணியாற்றி, தமிழக மக்களின் நாடித்துடிப்பு தெரிந்த ஒரே தலைவர், சமகால தமிழக அரசியலின் ஒப்பில்லா சாணக்கியராகத் திகழும் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் ஆற்றவிருக்கும் பேருரை தான் எங்களுக்கான MASTERCLASS.''
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
அதிமுக இரு அணிகளின் வாபஸ் மனுக்கள் ஏற்கப்படுமா? இன்று அறிவிக்கும் சபாநாயகர்.. பரபரப்பில் ர.ரக்கள் -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
அதிமுக ரெண்டுபட்டா விஜய்க்கு தான் கொண்டாட்டம்! பஞ்சாயத்தை கூட்டிய எடப்பாடி.. வேலுமணி வைத்த டிமாண்ட்! -
தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு? -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம் -
எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்..பொய்க்கால் குதிரை அரசு! விஜய்யை வெளுத்த எடப்பாடி பழனிசாமி -
“Deep Silent Mode”ல் தலைவர்கள்?.. உதயநிதி - எடப்பாடிக்கு மாணிக்கம் தாகூர் சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications