இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சியா? வாய்ப்பில்லை ராஜா! அடித்து சொல்லும் எடப்பாடி பழனிசாமி
சென்னை: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்பிருப்பதாக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது. இதற்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, சின்னத்தை யாராலும் முடக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கின்றன. தமிழ்நாட்டை பொறுத்த வரையில், திமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிகளோடு கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொண்டதோ அதே கட்சிகளுடன் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளவும் தயாராகி வருகிறது. இந்த கட்சிகளுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தையை திமுக முடித்திருக்கிறது. விரைவில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது.

ஆனால், மறுபுறம் அதிமுகவை பொறுத்த அளவில் இன்னும் கூட்டணியே உறுதி செய்யப்படவில்லை. தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளை ஈர்க்க அதிமுக முயன்று வருகிறது. கட்சியின் பொதுச்செயலாளரான பின்னர் எதிர்கொள்ளும் முதல் லோக்சபா தேர்தல் இது என்பதால் இதில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். ஆனால், அவருக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அதிரடியான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
அதாவது, இந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட வாய்ப்பிருக்கிறது என ஓபிஎஸ் தரப்பு அச்சுறுத்தி வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம், "இரட்டை இலையை முடக்க வேண்டும் என்று நினைத்து யாராவது தேர்தல் ஆணையத்தை அணுகினால் இரட்டை இலை சின்னம் முடங்கிவிடும் வாய்ப்பு உள்ளது" என்று கூறியிருந்தார். மட்டுமல்லாது "எடப்பாடி இல்லாமல் கட்சியை இணைப்போம். அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிட்டால் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும்" என்றும் கூறியிருந்தார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார். அதாவது, "உச்சநீதிமன்றம் தொடங்கி உயர்நீதிமன்றம் வரை அனைத்து நீதிமன்றங்களும் சின்னத்தை எங்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். தேர்தல் ஆணையமும் இதனை உறுதி செய்திருக்கிறது. இப்படி இருக்கும்போது சின்னத்தை எப்படி முடக்குவார்கள்? சின்னத்தை முடக்க வேண்டும் என்பவர்களின் ஆசை நிறைவேறாது, அது நிராசையாகவேதான் இருக்கும். இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது" என்று கூறியுள்ளார்
கூட்டணி குறித்த கேள்விகளுக்கு, "பொறுத்திருந்து பாருங்கள், தேர்தல் அறிவித்த பின்னர்தான் கூட்டணி இறுதி செய்யப்படும். திமுக கூட்டணியிலிருந்து பல கட்சிகள் வெளியேறும். அதிமுக கூட்டணி விரைவில் முடிவு செய்யப்படும்" என்று கூறியுள்ளார்.
-
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
செத்த பாம்பை அடித்த எடப்பாடி.. 3 எம்எல்ஏ எஸ்கேப்! கெஜட்டிலேயே வந்தாச்சு! இப்போ பேசி என்ன பிரயோஜனம்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
தலைக்கு மேல் தொங்குது கத்தி.. வேதனையில் வேலுமணி டீம்! விடாப்பிடியாய் எடப்பாடி.. விஜய் கொடுத்த ஆஃபர் -
எடப்பாடினு சொன்னாலே பயம் வரனும்.. ஹோட்டல் மீட்டிங்கில் வெடித்த இபிஎஸ்! விஜய்க்கு லட்டு போல் சான்ஸ்! -
“திமுக உதவியுடன் ஆட்சி!” எடப்பாடி பழனிசாமியின் கேம்.. தவெகவில் இணைய காரணத்தை சொன்ன எம்எல்ஏக்கள் -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
இன்பதுரை எடுத்த சுப்ரீம் ஆயுதம்? சபாநாயகர் போட்ட 5 நிமிட உத்தரவு! சுப்ரீம் கோர்ட்டில் சிக்கும் தவெக? -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
சென்னையில் கால் வைத்த செங்கோட்டையன்.. அடுத்து நொடி எடப்பாடிக்கு அதிர்ச்சி.. 3 அதிமுக MLAகள் ராஜினாமா












Click it and Unblock the Notifications