கொடநாடு கொலை கொள்ளை.. எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி கருத்துக்கள் நீக்கம்! மேத்யூ சாமுவேல் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை நீக்கி மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி வீடியோ வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் உள்ளிட்டோருக்கு எதிராக, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு கோடியே ரூ.10 லட்சம் மான நஷ்டஈடு கோரி, 2019ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

edappadi palaniswami crime madras high court

வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, பதில் மனுவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூறியுள்ள தேவையற்ற கருத்துக்களை நீக்குவது தொடர்பாக மனு தாக்கல் செய்ய மேத்யூ சாமுவேல் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மேத்யூ சாமுவேல் தரப்பில், பதில் மனுவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கூறியுள்ள தேவையற்ற கருத்துக்களை நீக்கி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, பதில்மனுவில், வேறு ஏதேனும் கருத்துக்களை நீக்க வேண்டுமா என்பது தொடர்பாக தெரிவிக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 9ம்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+