ஓபிஎஸ்க்கு ஒரு பக்கம்தான் அடி! இபிஎஸ்க்கு எல்லா பக்கமும் அடி.. மாறும் கிளைமேக்ஸ்? ஒன்னு கூடிட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

சென்னை : அதிமுகவில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் இவர்கள் மட்டுமல்லாது டெண்டர் முறைகேடு வழக்கு, ஆதரவாளர்களிடம் சோதனை, நிர்வாகிகள் அணி தாவுவது என பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் இதனால் அவர் தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்து கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக அதிமுகவில் யார் பெரியவர் என்று அதிகார மோதல் இருந்து வந்தாலும் தற்போது அது உச்சத்தினை அடைந்திருக்கிறது.

பொதுக்குழு மூலம் பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற நிலையில் ஒற்றை தலைமையாக அவர் தொடர்வதை விரும்பாத ஓபிஎஸ் நீதிமன்றம் மூலம் குடைச்சல் கொடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

தற்போது மேல்முறையீட்டு வழக்கில் தங்களுக்குத் தான் ஆதரவு கிடைக்கும் என இரு தரப்பினருமே மலை போல் நம்பி இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமியை ப்பொறுத்தவரை தீர்ப்பு ஒன்று தான் சட்டரீதியாக உதவும். ஓபிஎஸ்க்கு அதே தான் என்றாலும், சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவும், மேலிடம் கொடுக்கும் சப்போர்ட், அடிக்காடி தாவி வந்து ஆதரவு தரும் இபிஎஸ் அணி நிர்வாகிகள், நீதிமன்றத்தில் கிடைத்த தீர்ப்பு என படு உற்சாகத்தில் இருக்கிறார்.

 சசிகலா, டிடிவி தினகரன்

சசிகலா, டிடிவி தினகரன்

ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அப்படியில்லை. ஒற்றைத் தலைமை விவகாரமே அவருக்கு விவகாரமாகப் போய்விட்டது. முதலில் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருந்த நிலையில் ஆட்சியை காப்பாற்ற ஓ பன்னீர்செல்வம் உறுதுணையாக இருந்தார். ஆட்சி கைவிட்டு போன நிலையில் பதவியாவது கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில் தற்போது ஓ பன்னீர் செல்வமே அதற்கும் எதிராக நிற்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு சற்றே ஒரு பெரிய பிரச்சனை தான்.

பல பிரச்சினைகள்

பல பிரச்சினைகள்

ஓ.பன்னீர்செல்வத்தை பொருத்தவரை அவருக்கு தற்போதைய ஒரே பிரச்சனை எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான். ஆனால் எடப்பாடி பழனிசாமிக்கு அப்படியில்லை. ஓபிஎஸ் சசிகலா டிடிவி தினகரன் இவர்கள் மட்டுமல்லாது பல பிரச்சினைகள் திடீரென அவரைச் சூழ்ந்திருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை, ஆதரவாளர் இல்லங்களில் வருமானவரித்துறை சோதனை, சசிகலா - ஓபிஎஸ்- டிடிவி தினகரன் இணைப்பு, விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு, தற்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக விஜயபாஸ்கர் மீதான விசாரணை என அடுத்தடுத்த சிக்கல்கள் எழுந்து வருகிறது.

குழப்பம்

குழப்பம்

மேலும் தற்போது ஒரே நம்பிக்கையான சென்னை உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது உறுதியாக தெரியாத நிலையில் குழப்பத்தில் இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. மேலும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர், பொதுக்குழு உறுப்பினர்கள் என அடுத்தடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலிருந்து ஓபிஎஸ் தரப்புக்கும் தாவி வருவது அவருக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதை அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருக்கிறார் என்கின்றனர் சேலம் ஆதரவாளர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+