ஒற்றைத் தலைமை ரெடி! எம்ஜிஆர் - ஜெயலலிதா பலத்தை எட்டிவிட்டாரா எடப்பாடி?
சென்னை: 1972இல் தொடங்கப்பட்ட அதிமுக என்ற அரசியல் கட்சி தமிழ்நாட்டில் தாய்க் கழகமான திமுகவைவிட பலமான கட்சியாக உருவெடுத்தது. அதற்கு காரணம் எம்ஜிஆர். அந்தச் செல்வாக்கை மேலும் உயர்த்தினார் ஜெயலலிதா.
அஇஅதிமுகவின் அதிகாரப்பூர்வமான பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிதான். ஆனால், அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான முதல்வர் வேட்பாளர் அவர்தானா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதற்கான அக்னிப் பரீட்சைதான் இந்த 2026 தேர்தல் களம். பரப்புரை பந்தயத்தில் ஸ்டாலினைவிட அவர் முந்திக் கொண்டுள்ளார்.

வெற்றிவாய்ப்பில் அவர் வென்று கட்சியையும் தன்னையும் கரைசேர்க்க வேண்டிய பொறுப்பு அவர் தோளில் பெருஞ்சுமையாக உள்ளது. அவர் 'காண்டீபனா'? அவர் கையில் உள்ளது காண்டீபமா? அது வெல்லுமா? திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி, ராமச்சந்திரன் 1972இல் தனிக் கட்சி கண்டார். அவரே ஊகிக்காத அளவு மக்கள் ஆதரவு இருந்தது. 'சினிமா மோகத்தால் கூட்டம் கூடுகிறது' என்றது தாய்க் கழகம்.
அது மோகமல்ல; பெரிய மக்கள் அலை என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார். அதிமுக உருவான சில வாரங்களில் 13 லட்சம் பேர் தங்களை உறுப்பினராக்கிக் கொண்டனர். 214 பேர் ரத்தத்தில் கடிதம் எழுதி இருந்ததை எம்.ஜி,ஆரே தி.நகர் ஆற்காடு முதலித் தெரு வீட்டில் வைத்து அளித்த பேட்டியில் உறுதிசெய்தார். அவரது ரசிகர்கள் 60 பேர் மீது பொய் வழக்குப் புனையப்பட்டுள்ளதாக அவர் புகார் கூறினார்.
ஆனால், ரசிகர்கள் மன்றம் என்ற பெயரில் வன்முறை வெறியாட்டம் நடந்தது என்றும் சென்னை மாநகராட்சிக்கு ஜீப் தீக்கு இரையாகியது என்றும் அன்றைய முதல்வர் மு.கருணாநிதி மறுத்தார். எம்ஜிஆர் தன் பலத்தை திமுகவுக்கு உணர்த்த வேண்டிய சந்தர்ப்பத்தைத் திண்டுக்கல் இடைத்தேர்தல் உருவாக்கித் தந்தது. திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாங்கம் மறைவையொட்டி அங்கே இடைத்தேர்தல் வந்தது.
பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் முன்னாள் நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம் ஒரு யோசனையை மொழிந்தார். இடது கம்யூனிஸ்ட் ஏ.பலசுப்பிரமணியமும் வலது கம்யூனிஸ்ட் கல்யாணசுந்தரமும் அதிமுகவுக்குத் துணையாக நின்றனர். எனவே மோதிப் பார்க்கும் முடிவை எடுத்து மாயத் தேவரை நிறுத்தி, 2,60,930 வாக்குகளில் வெற்றி பெறவைத்தார் எம்ஜிஆர்.
முதல்வர் ஆனார் எம்ஜிஆர்
திமுகவுக்கு முதல் அடி. காலியான அக்கட்சியில் அதிமுகவின் இரட்டை இலை கொடி பறந்தது. அதற்குப் பின்னர் அதிமுக 1985 வரை தோல்வியைத் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை. 1977இல் அதிமுக 130 இடங்களில் வென்றது. அவர் இரவு பகலாகப் படப்பிடிப்பிலிருந்தார். அவர் பதவியேற்க 15 நாட்கள் ஆனது. 'அவர் காத்திருக்கும் முதல்வர் இல்லை; தமிழகம் தன் முதல்வருக்காகக் காத்திருக்கிறது' என்று ரத்தத்தின் ரத்தங்கள் பதவுரை கூறினர்.
இதே நெருக்கடி ஜெயலலிதாவுக்கு 1985இல் நேர்ந்தது. உடல் சுகவீனத்தால் அமெரிக்காவில் தீவிர சிகிச்சையிலிருந்தார் எம்ஜிஆர். அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்யக்கூட வரமுடியாத சூழல். அங்கிருந்தே அஞ்சல் வழியில் மனுத்தாக்கல் செய்து ஆண்டிபட்டியில் களம் கண்டார். ஜெயலலிதா தனித்து 530 கூட்டங்கள் பேசினார். 87 டிசம்பர் 1987இல் எம்ஜிஆர் மறைவு கட்சியில் பிளவை உண்டாக்கியது.
அதற்கு முன்னதாகவே எம்ஜிஆர் உயிருடன் இருந்த காலத்திலேயே சிலர் கட்சியை உடைக்க முயன்றனர். எஸ்டிஎஸ் பிரிந்துபோய் 'நமது கழகம்' என புதிய கட்சி தொடங்கினார். 1984இல் சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி ஒன்றில்கூட வெல்லவில்லை. எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது அரசியல் வாரிசு யார் என மோதல் உண்டானது.
அதில், 'ஜெ' அணி 'ஜா' அணி எனப் பிளவு உண்டானது. 87இல் 'ஜெ' அணி சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டவரே எடப்பாடி பழனிசாமி. முன்னதாக 1986 சிலுவம்பாளையம் ஊராட்சி மன்றத் தேர்தலில் நின்ற பழனிசாமி தன் முதல் தோல்வியைச் சந்தித்தார். ஜானகியிடமிருந்து அதிகாரப்பூர்வமாக ஜெயலலிதாவின் கைக்கு அதிமுக சென்றது. அவருக்கு எதிராகத் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் போர்க்கொடி உயர்த்தினர்.
அனைத்தையும் முறியடித்த நின்ற ஜெயலலிதாவின் அதிமுகவில் 17 லட்சம் பேர் உறுப்பினராக இருந்தனர். எடப்பாடி பழனிசாமி காலத்தில் ஒரு கோடி தொண்டர்கள் என்கிறார். உறுப்பினர் எவ்வளவு? அதற்கான தரவுகள் வெளிப்படையாக இல்லை. 1982இல் ஜெயலலிதா அதிமுகவில் இணைந்தார். 87இல் ஜெ அணி பலப்படுத்த சேவல் சின்னத்தில் களமிறங்கிய பழனிசாமி, 1991இல் இரட்டை இலை' சின்னத்தில் போட்டியிட்டு முதல் வெற்றியை ருசித்ததற்குப் பின், 2011இல் தான் அதிமுக அமைச்சரவையில் இடம் கிடைத்தது.
எடப்பாடி பழனிசாமி நிலை?
கோனேரிப்பட்டி கிளைக்கழகச் செயலாளராக கே.ஏ.செங்கோட்டையன் மூலமாகப் பதவியைப் பெற்ற எடப்பாடி பழனிசாமி, 2017 பிப்ரவரி 16 அன்று முதல் அமைச்சராகப் பதவியேற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் சில மாதங்களே ஓபிஎஸ் பதவியில் நீடிக்க முடிந்தது. அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்ற நிலையில், 'கூவத்தூர்' அதிரடி அரசியல் ஆட்டத்திற்குப் பின்பு எடப்பாடி புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சட்டமன்றத் தேர்தலைத் தவிர்த்து பழனிசாமி, 1998 இல் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் நின்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இப்பதவி ஒரே ஆண்டே நீடித்தது. ஆட்சிக் கவிழ்ப்பால் பதவியை இழந்தார் பழனிசாமி. இவர் முதல்வராக இருந்தபோதே ஆட்சிக் கவிழ்ந்துவிடும் எனப் பலரும் நம்பினர். 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் சென்று புகாரளித்தனர்.
சாதுரியமாக அவர்களைத் தகுதி இழக்கச் செய்து, 2019இல் நடைபெற்ற 18 தொகுதி இடைத்தேர்தல் மூலம் 9 தொகுதிகளில் வென்று, சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தை 122 ஆக உயர்த்தி தன் பெரும்பான்மையை நிரூபித்தார். அதுவே எடப்பாடி பழனிசாமியின் முதல் அரசியல் சாதுரியம்.
ஆனால், அதன்பின் நடந்த 10 தேர்தல்களில் அவருக்குத் தோல்வி முகமே மிஞ்சியது.
சட்டமன்ற பலபரீட்சையில் தன் பலத்தை நிரூபித்த இவர், அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளர் தானே என்பதை உறுதி செய்த இவர், ஒற்றைத் தலைமை அதிமுக என உணர்த்தி காட்டிய இவர், ஆளும் கட்சியுடன் மோதி, ஈடுகொடுத்து வெல்வாரா? அதை இத்தேர்தலே மக்கள் மன்றத்தில் உறுதி செய்யக்கூடும்.
- கடற்கரய்
-
மொத்தமாக அள்ளும் திமுக.. மீண்டும் ஸ்டாலின் ஆட்சி தானாம்! அதிமுக, விஜய்க்கு படுதோல்வி! புதிய சர்வே -
அடுத்தடுத்து வெளியான 4 சர்வே.. எல்லாம் சொல்லும் ஒரே விஷயம்.. நாம் தமிழர் கட்சிக்கு பெரிய சிக்கல்! -
அடியோடு ஆட்டம் காணும் இரட்டை இலை... ஸ்டாலின் 2.0.. திரும்பி பார்க்க வைத்த 'இன்சைட் எலெக்ஷன்' சர்வே -
மகளிர் உரிமை தொகை ரூ.2 ஆயிரம், ரூ.8,000 கூப்பன் வாக்குறுதிகள் என்னை கவர்ந்தது.. நடிகை ரோகிணி! -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
இவங்கதான் இப்போ லைம் - லைட்ஸ்.. தேர்தல் களத்தையே திரும்பி பார்க்க வைத்த பெண் தலைகள்.. பின்னணி -
“ஜெயிலுக்கு போக இருந்த எடப்பாடி பழனிசாமியை காப்பாற்றிய 2 பேர்”.. ஓபிஎஸ் பேச்சு! -
விஜய் பக்கம் திரும்பும் செளராஷ்டிரா வாக்குகள்.. அதிமுக, பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சி! கள நிலவரம் என்ன? -
“நான் பேசியதாக பரப்பப்பட்ட ஆடியோ AI மூலம் பொய்யாக உருவாக்கப்பட்டது” - ஆ.ராசா விளக்கம்! -
எடப்பாடிக்கு அதிர்ச்சி! திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளருக்கு தொடர்புடைய இடங்களில் விடிய விடிய சோதனை -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
மதுரை தெற்கை பாஜகவுக்கு கொடுத்தது ஏன்.. டென்ஷனான அதிமுகவினர்.. ராம ஸ்ரீனிவாசனுக்கு புது பிரச்சனை!












Click it and Unblock the Notifications