Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அதிமுகவின் 7-வது பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி... இதுவரை பதவி வகித்தவர்கள் யார் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் 50 ஆண்டுகால வரலாற்றில் அக்கட்சியின் 7-வது பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

1972-ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா அதிமுகவை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த 7 ஆண்டுகளாக அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்தது.

Edappadi Palaniswami takes over as AIADMKs 7th general secretary

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் சசிகலா. ஆனால் சசிகலா சில நாட்களிலேயே பெங்களூர் சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டது. இதன்பின்னர் அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்தன. இதனால் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நிரந்தரமாக ஜெயலலிதாவுக்குதான் என ஒரு விதியை அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து உருவாக்கினர். அதிமுகவில் ஒரூங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் என பிளவு ஏற்பட்டது. இது தொடர்பான சட்டப் போராட்டங்களின் இறுதியாக தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுகவின் 7-வது பொதுச் செயலாளராகி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி வகித்தவர்கள் விவரம்:

1974-ம் ஆண்டு அதிமுக நிறுவனரான எம்ஜிஅர் அக்கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1976-ம் ஆண்டு அதிமுகவின் மூத்த தலைவரான நாவலர் நெடுஞ்செழியன், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

1980-ம் ஆண்டு மற்றொரு மூத்த தலைவரான ப.உ.சண்முகம், அதிமுகவின் பொதுச்செயலாளரானார்.

1984-ம் ஆண்டு அதிமுகவின் எஸ்.ராகவானந்தம் பொதுச்செயலாளரானார். அப்போதுதான் அதிமுகவின் ஜெயலலிதாவின் வருகை பெரும் புயலை கிளப்பிக் கொண்டிருந்தது.

1986-ம் ஆண்டில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிகளை முன்வைத்து பெரும் பிரளயம் வெடித்தது. மீண்டும் அதிமுக பொதுச்செயலாளரானார் எம்ஜிஆர். ஆனால் மூத்த துணை பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு ராகவானந்தத்துக்கு அப்பதவி வழங்கப்பட்டது. துணை பொதுச்செயலாளர்களாக ஹண்டே, காளிமுத்து நியமிக்கப்பட்டனர்.

1987-ம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் அதிமுக மீண்டும் பிளவுபட்டது. இதன் பின் அதிமுக அணிகள் ஒருங்கிணைந்தன. ஒருங்கிணைந்த அதிமுக பொதுச்செயலாளராக 1989-ம் ஆண்டு ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மறையும் வரை அதிமுக பொதுச்செயலாளராகவே இருந்தார். ஜெயலலிதா காலத்தில் மூத்த துணை பொதுச்செயலாளராக எஸ்டி சோமசுந்தரம், பஉ சண்முகம், ஆர் எம்வீரப்பன் இருந்தனர்.

2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அதிமுக பொதுச்செயலாளரானார். இதனையடுத்து 2017-ல் சசிகலா அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

எம்ஜிஆர், நெடுஞ்செழியன், ப.உ. சண்முகம், ராகவானந்தம், ஜெயலலிதா, சசிகலா ஆகியோரைத் தொடர்ந்து அதிமுகவின் 7-வது பொதுச்செயலாளராகி உள்ளார் எடப்பாடி கே.பழனிசாமி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+