நிதிஷ் குமாரின் நிலை எடப்பாடிக்கும் வருமா.. ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை.. நயினார் நாகேந்திரன் பதில்
திருச்சி: பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட நிலை போல் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்படுமோ என்று ஸ்டாலின் கவலைப்பட தேவையில்லை என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதிமுகவை கபளீகரம் செய்ய வேண்டிய தேவை பாஜகவுக்கு இல்லை என்று கூறிய நயினார் நாகேந்திரன், பீகாரில் நிதிஷ் குமார் மகனுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் நடைபெற்ற பீகார் சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி பிரம்மாண்ட வெற்றியை பெற்றது. இந்த தேர்தலில் பாஜக 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றது. அதேபோல் சிராக் பாஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சி 19 இடங்களில் வென்றது. இதையடுத்து பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ் குமார் பதவியேற்றார்.

தற்போது ஆட்சி அமைத்து 4 மாதங்களே ஆகும் சூழலில், திடீரென நிதிஷ் குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ்ய சபாவுக்கு செல்ல இருக்கிறார். இதனால் ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். இது தமிழ்நாட்டிலும் எதிரொலித்து வருகிறது. ஏனென்றால் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளன. கூட்டணியில் உள்ள கட்சியின் பிடி பாஜக வசம் இருக்கிறது.
இதனால் இதுவரை தொகுதி பங்கீடு நிறைவடையாமல் இழுபறியில் இருக்கிறது. இதனிடையே அதிமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், நிதிஷ் குமார் நிலைமை தான் எடப்பாடி பழனிசாமிக்கு வரும் என்றும், அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்த போது, இந்த கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு நயினார் நாகேந்திரன், எந்தக் கட்சியையும் கபளீகரம் செய்ய வேண்டிய தேவை பாஜகவுக்கு கிடையாது. அது எங்களுக்கு தெரியாது. பீகார் விவகாரத்தை பொறுத்தவரை பாஜக அதிக எம்எல்ஏ-க்களை வென்றிருந்தாலும் கூட, முதல்வராக நிதிஷ் குமார் பொறுப்பேற்றார். இத்தனை மாதங்களாக அவர் இருந்தார். இப்போது சூழல் மாறி இருக்கிறது.
இருந்தாலும் நிதிஷ் குமாரின் மகன் துணை முதல்வராகி இருக்கிறார். அதனால் எந்த கபளீகரமும் பாஜக செய்யவில்லை. ஸ்டாலினும் அதனைப் பற்றி கவலைப்பட தேவையில்லை.. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அதனால் இனி மக்கள் மனதில் திமுகவுக்கு இடமும் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, டீசல், பெட்ரோல் விலையை மத்திய அரசு குறைத்த போதும் கூட திமுக மாநில அரசு வரியை குறைக்க முன் வரவில்லை. எல்பிஜி சிலிண்டர் விவகாரத்தில் நாங்கள் மானியம் கொடுத்து வந்திருக்கிறோம். மீண்டும் குறைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார். ஆனால் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக நயினார் நாகேந்திரன் கருத்து சொல்லாமல் கடந்து சென்றார்.
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
Waiting Is Over.. பாஜகவுக்கு டாடா சொன்ன அண்ணாமலை! புதிய கட்சி எப்போது உதயம்? லீக்கான தகவல்! -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
உள்கட்சி பூசலுக்கு இடையே பல்ஸ் பார்க்கும் எடப்பாடி! மாவட்ட வாரியாக கூட்டம் நடத்துவது ஏன்? பின்னணி -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
அதிமுக 4 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லுமா? எடப்பாடி பழனிசாமி வழக்கு! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்!












Click it and Unblock the Notifications