அதிமுகவிடம் 9 தொகுதிகளை 'ஆட்டைய' போட்ட பாஜக- இன்னும் எத்தனை களவோ? டெல்லி பறக்கும் எடப்பாடி பழனிசாமி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை திடீரென டெல்லி செல்ல உள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார் என்கின்றன அதிமுக தகவல்கள்.

தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் பாஜக மேலிடம் படு பிஸியாக இருக்கிறது. இந்த 5 மாநில தேர்தல்களுக்கான வேட்பாளர்கள் தேர்வு தொடர்பான கூட்டங்கள் நள்ளிரவை தாண்டியும் நடைபெற்று வருகின்றன.

Edappadi Palaniswami to meet Amit Shah, JP Nadda in Delhi

அதேநேரத்தில் பல மாநிலங்களில் லோக்சபா தேர்தல் பணிகளில் முதல் கட்ட பணிகளை நிறைவு செய்யும் நிலையில் இருக்கிறது பாஜக. அதாவது மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்கிறோம்; மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம் என்ற பெயரில் இந்த பிரசார பணிகளை பாஜக தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது.

9 தொகுதிகளில் முதல் கட்ட பிரசாரம்: தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, கோவை, ராமநாதபுரம், நீலகிரி, நெல்லை, தென்சென்னை, வேலூர், ஈரோடு, சிவகங்கை ஆகிய தொகுதிகளை குறிவைத்து பாஜக படுதீவிரமான பணிகளை மேற்கொண்டுள்ளது. இத்தொகுதிகளில் மத்திய அமைச்சர்கள் முகாமிட்டு ஒவ்வொரு சட்டசபை தொகுதியாக சென்று பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். இத்தொகுதிகளில் ஓரளவு முதல் கட்ட பிரசாரம் முடிவடைந்துவிட்டது.

15 முதல் 20 தொகுதிகள் டார்கெட்: இப்போது மேலே குறிப்பிட்ட 9 தொகுதிகள் மட்டுமல்லாமல் மேலும் சில இடங்களையும் பாஜக டார்கெட் செய்து வைத்திருக்கிறதாம். தமிழ்நாட்டில் குறைந்தது 15 முதல் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடலாம் என கணக்குப் போட்டு வைத்துள்ளதாம். இதில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் மேலே சொன்ன 9 தொகுதிகளில் அதிக கவனம் செலுத்துகிறதாம்.

தன்னிச்சையான போக்கு என குமுறல்: தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில்தான் பாஜக இருக்கிறது. ஆனால் அதிமுகவுடன் எந்த பேச்சுவார்த்தையுமே நடத்தாமல் பாஜகவே 9 தொகுதிகளை தம் வசம் கையில் எடுத்து பிரசாரம் செய்வதை அதிமுக தலைவர்கள் எவருமே ரசிக்கவில்லை. கடந்த லோக்சபா, சட்டசபை தேர்தல்களின் போதும் இதே போல பாஜக தன்னிச்சையாக செயல்பட்டது. அப்போது அதிமுக தரப்பு ரொம்பவே கறார் காட்டியதால் பாஜக பின்வாங்கியது.

சொற்ப இடங்கள்தான் அதிமுகவுக்கா?: அடுத்த லோக்சபா தேர்தலுக்கும் இதே பாணியை பாஜக கையில் எடுத்திருப்பதை எதிர்க்கவும் முடியாமல் சுட்டிக்காட்டவும் முடியாமல் அதிமுக தலைமை தத்தளித்துக் கொண்டிருக்கிறதாம். பாஜகவின் இந்தப் போக்கை தொடர்ந்து அனுமதித்தால் சொற்ப இடங்களில்தான் அதிமுவே போட்டியிடும் நிலைமை உருவாகிவிடும்; அது அதிமுகவின் இருப்புக்கே ஆப்பாகிவிடும் என்பதுதான் அதிமுக தலைமையின் பதற்றமாம்.

நிதிஷ்குமார் கதியா?: பீகார் மாநிலத்தில் ஜேடியூவுடன் கூட்டணி வைத்த பாஜக, அங்கு சொற்ப இடங்களை ஜேடியூவுக்கு ஒதுக்கி அக்கட்சி தோல்விக்கும் காரணமாக உள்ளடி வேலை பார்த்தது. இதனால் நிதிஷ்குமாரின் அரசியல் எதிர்காலத்தையே சூனியமாக்கும் நடவடிக்கையில் முன்னேறியது பாஜக. அதே போன்ற நிலைமை தங்களுக்கும் வருமோ என்பது அதிமுகவின் அச்சம்.

டெல்லியில் சந்திப்பு: இதனைத் தொடர்ந்துதான் டெல்லி செல்ல இருக்கிறாராம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த பயணத்தின் போது அமித்ஷா, ஜேபி நட்டாவை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி. லோக்சபா தேர்தல் குறித்த பேச்சுவார்த்தைகளின் போது, பாஜகவின் தன்னிச்சையான போக்கு, தொகுதிகளை கபளீகரம் செய்வது ஆகியவற்றை போகிற போக்கிலாவது சுட்டிக்காட்டிவிட வேண்டும் என நினைத்துதான் டெல்லிக்கே செல்கிறாராம் எடப்பாடி பழனிசாமி. நினைத்தது நடக்குமா? என்பதுதான் புரியாத புதிர் என்கின்றனர் அதிமுக தலைவர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+