"கோடநாடு" எழுத வேண்டாம் என எடப்பாடி சொன்னார்.. கேட்டதற்கு என்ன சொன்னார் தெரியுமா? ஓபிஎஸ் ஆதரவாளர்
சென்னை: நமது அம்மா நாளிதழின் ஆசிரியராக தான் இருந்த போது, கோடநாடு வழக்கு குறித்து எழுத வேண்டாம் என தன்னிடம் எடப்பாடி கூறியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொலை, கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. அப்போது முக்கிய ஆவணங்களும், பொருட்களும் கொள்ளை அடிக்கப்பட்டன. மேலும், அப்போது பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் சயான், வாளையாறு மனோஜ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.

இதில் முக்கிய நபரான ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 2017 ஏப்ரல் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற சாலை விபத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அதேபோல் சயான் சென்ற கார் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இதில் சயான் மனைவி, மகள் இறந்தனர். சயான் காயத்துடன் உயிர்தப்பினார். கோடநாடு எஸ்டேட்டில் சிசிடிவி கேமராவை கண்காணித்து வந்த ஆபரேட்டர் தினேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இப்படி கோடநாடு வழக்கோடு சம்பந்தப்பட்டவர்களில் அடுத்தடுத்து மர்ம மரணங்கள் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. கோடநாடு கொலை கொள்ளை குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் சில ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர், வேறொரு வழக்கில் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, உடல் நலக்குறைவு காரணமாக அவ்வப்போது போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குச் சென்று வருகிறார் தனபால். இந்நிலையில் நேற்று சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தனபால், "எனது சகோதரர் கனகராஜ் கோடநாடு பங்களாவில் இருந்து 5 பெரிய பைகளை எடுத்துவந்து சிலரிடம் கொடுத்தார்.
கோடநாட்டில் கொள்ளை நடந்த நேரத்தில் எனது தம்பி கனகராஜை பெருந்துறையில் தான் சந்தித்தேன். என்னை சந்தித்தபோது கனகராஜ் 5 பெரிய பைகளை வைத்திருந்தார். எடப்பாடி பழனிசாமி கூறியதன் பேரில்தான் 5 பைகளை எடுத்து வந்ததாக கனகராஜ் என்னிடம் தெரிவித்தார்" என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும் கோடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும் என்றும் கூறினார்.
தனபாலின் இந்த பேட்டி அதிமுக வட்டாரத்திலும் அதிர்வுகளை கிளப்பும் வகையில் இருந்தது. இந்த நிலையில், கோடநாடு வழக்கு குறித்து தன்னிடம் எழுத வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் கூறியுள்ளார். இது தொடர்பாக மருது அழகுராஜ் கூறீயதாவது:- நமது அம்மா ஆசிரியராக இருந்த என்னிடம் கோடநாடு குறித்து எழுத வேண்டாம் என்று அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி கூறினார்.

ஏன் எழுத வேண்டாம் என்று கேட்டதற்கு, நம்ம ஆட்சியிலேயே நடந்ததால.. அதைப்பற்றி நாம எழுத வேண்டாம் என்று சொன்னார்.. இல்லன்னே இதைப்பற்றி எழுதாமல் எப்படி இருக்கிறது என நான் கேட்டதற்கு... எழுத வேண்டாம் என்று சொல்லிவிட்டார். எடப்பாடி பழனிசாமி எழுத வேண்டாம் என சொன்னதற்கான அர்த்தத்தை காலப்போக்கில் நான் புரிந்து கொண்டேன்.
2024 தேர்தல் வந்தால் ஏட்டு சுரைக்காய் எது.. மக்கள் சக்தி படைத்த தலைமை எது என்று தெரிந்து விட போகிறது. 2024 தேர்தலுக்கு அவர் வெளியில் இருக்க போகிறாரா? சிறைக்கு செல்வாரா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். 2024 ஓட்டு கேட்கவே வருவாரா என்று பாருங்கள்? இவ்வாறு அவர் கூறினார்.
-
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
2026ல் மீண்டும் ஸ்டாலின் முதல்வர்.. 180+ இடங்களை வெல்லும் திமுக கூட்டணி.. ANS சர்வே முடிவுகள்! -
John Pandian: அதிமுக பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கீடு -
அதிமுக தொகுதி பங்கீடு எல்லாம் ஓகேதான்! ஆனா.. ஜி.கே.வாசன் மிஸ்ஸிங்! கவனிச்சிங்களா! -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது?












Click it and Unblock the Notifications