விஜய்க்கு கிடைக்க இருந்த ஒரு எம்எல்ஏ ஆதரவும் போச்சா.. அதிமுக கைக்குள் அமமுக

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவே, அமமுகவின் முடிவு என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக சார்பாக மன்னார்குடியில் போட்டியிட்டு வென்ற காமராஜ், அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புதுச்சேரி தனியார் விடுதியில் இருப்பதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனாலும் ஆளுநர் தரப்பில் 118 என்ற பெரும்பான்மை எம்எல்ஏ-க்களின் ஆதரவு கடிதங்களை கேட்பதால், விஜய்யால் இன்னும் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால் தவெக நிர்வாகிகள் விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Edappadi Palaniswami ttvk dhinakaran aiadmk

விஜய் தரப்பில் கடிதம் மூலமாகவும், அலைபேசி வாயிலாகவும் இந்த 3 கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது. ஆனால் தவெகவினர் என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகளிடம் இதுவரை ஆதரவு கோரவில்லை. பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் சைலண்ட் மோடில் இருக்கின்றனர். ஆனால் அதிமுக தனது 28 எம்எல்ஏ-க்களையும் புதுச்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்திருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியின் இந்த செயல்பாடுகளால் தவெக கொஞ்சம் பரபரப்பாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் திமுக ஆதரவில் அதிமுக ஆட்சி அமைக்க உள்ளதாகவும் பேச்சுகள் எழுந்துள்ளன. இருந்தாலும் விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகளின் முடிவுகளை பொறுத்தே அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதன் காரணமாக தவெகவினர் மட்டுமல்லாமல் திமுக மற்றும் அதிமுக ஆதரவாளர்களும் திக் திக் மோடில் இருக்கின்றனர். இந்த நிலையில் அமமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. அமமுக சார்பாக மன்னார்குடி தொகுதியில் போட்டியிட்ட காமராஜ் வெற்றி பெற்றுள்ளார். அவரின் ஆதரவு எந்தக் கட்சிக்கு இருக்கும் என்ற கேள்வி எழுந்தன.

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசுகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் முடிவே, அமமுகவின் முடிவு. மன்னார்குடியில் போட்டியிட்டு வென்ற காமராஜ், அதிமுக எம்எல்ஏ-க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புதுச்சேரி தனியார் விடுதியில் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+