மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தலைமையில் கூட்டணி அமைத்துள்ளது. இந்த தேர்தல் உண்மையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அக்னி பரீட்சையாகும். வாழ்வா - சாவா போட்டியில் எடப்பாடி பழனிச்சாமி உள்ள நிலையில் இந்த தேர்தல் வெற்றி அதிமுகவிற்கு ஏன் முக்கியம்? என்பது பற்றி 3 காரணங்களில் பார்க்கலாம்.
அதிமுக கடந்த 1972ம் ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கி 53 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதிமுவில் பெரும் ஆளுமையாக இருந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இப்போது இல்லை. எடப்பாடி பழனிச்சாமி தான் கட்சியின் பொதுச்செயலாளராக வழிநடத்தி வருகிறார்.

இப்போது தமிழகத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
முதல் காரணம்
இந்த சட்டசபை தேர்தல் அதிமுகவை விட அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதன் பின்னணியில் 3 முக்கிய காரணங்கள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி 2017 பிப்ரவரி முதல் 2021 மே 6 வரை முதல்வராக இருந்தார். இந்த காலக்கட்டத்தில் இருந்தே அவர் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. 2017 டிசம்பர் மாதம் ஆர்கே நகர் சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக முதல் முறையாக தோற்றது. குக்கர் சின்னத்தில் சுயேச்சையாக களமிறங்கி டிடிவி தினகரன் வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 2019ல் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 9 இடங்களில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. பிறகு 2019 லோக்சபா தேர்தல் தோல்வி, ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், நகர்புற உள்ளாட்சி தேர்தல், 2024 லோக்சபா தேர்தல் என்று தொடர்ந்து அதிமுக, திமுக கூட்டணியிடம் தோல்வியை தழுவி வருகிறது.
எடப்பாடி போட்ட உத்தரவு
இதனால் இந்த தேர்தல் வாழ்வா - சாவா என்பதை எடப்பாடி பழனிச்சாமி அறிந்து வைத்துள்ளார். மேலும் கடந்த 2017 டிசம்பரில் ஆர்கே நகர் இடைத்தேர்தல் தோல்வியுடன் தொடங்கிய வீழ்ச்சியை மே 4ம் தேதி ரிசல்ட்டில் மாற்றி காட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தனது மாவட்ட செயலாளர்களுக்கு அதிரடியாக உத்தவிட்டுள்ளது. இதனால் தான் கடந்த ஓராண்டுக்கு மேலாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டங்கள் வழக்கத்தைவிட அதிக அளவில் நடத்தினர்.
இந்த கூட்டங்களின்போது கட்சி அமைப்பை செம்மையாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தையும், தொகுதிவாரியாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முக்கியத்துவத்தையும் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். அதேபோல் சிறு தவறு கூட நடந்து விடக்கூடாது என்பதால் தொகுதி பங்கீட்டிலும் கூட தனது ஆதரவாளர்களை நம்பாமல் எடப்பாடி பழனிசாமியே நேரடியாக ஈடுபட்டு வருகிறார்.
2வது காரணம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஒப்பிடும்போது ஊடகங்களை எடப்பாடி பழனிச்சாமி அடிக்கடி சந்திக்கிறார். இருப்பினும் ஜெயலலிதாவை போல் எடப்பாடி பழனிசாமியால் சிறந்த ஆளும்கட்சி தலைவர் என்ற பெயரை எடுக்க முடியவில்லை. மேலும் கடந்த சில ஆண்டுகளாக எடப்பாடி பழனிச்சாமியை தாண்டி பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை ஸ்கோர் செய்துவிட்டு சென்றார்.
இது போதாது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ஜெயலலிதா இருந்தால் விஜய் இப்படி பேசியிருக்க வாய்ப்பே கிடையாது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி, தவெகவை தாக்கவும், தேர்தலில் அவரது கட்சியை தோற்கடிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. மேலும் சமீபத்திய கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
இதனால் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் சிறந்த எதிர்க்கட்சி தலைவர், முதல்வர் வேட்பாளர் என்ற பிம்பத்தை மக்களிடம் கட்டமைக்க வேண்டி உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி எதிர்க்கட்சிகளை திறம்பட சமாளித்து தனது முழு அரசியல் திறமையை இறக்க வேண்டிய சூழல் உள்ளது.
3வது காரணம்
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அதிமுக மொத்தம் 34 தொகுதிகளில் போட்டியிட்டது. அந்த தொகுதிகள் அனைத்திலும் அதிமுக தோல்வியடைந்தார். அதோடு 7 தொகுதகிளில் டெபாசிட்டை இழந்தது. இதனால் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 45 சட்டசபை தொகுதிகளில் அதிமுகவை, பாஜக முந்தியது. மொத்தமாக 76 சட்டசபை தொகுதிகளில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அதிமுகவை விட அதிக வாக்குகளை பெற்றிருந்தனர்.
இப்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து இருப்பது அதிமுகவுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்பது மட்டுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பானதாக இருக்கும். மாறாக இந்த முறையும் அதிமுக ஆட்சியை பிடிக்காவிட்டால் அவரது நிர்வாகிகள் பிற கட்சிக்கு செல்லலாம். இது கட்சியின் கட்டமைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அதேபோல் சசிகலாவும் அதிமுகவிற்குள் களேபரத்தை உருவாக்க நினைக்கலாம். அதுமட்டுமின்றி எடப்பாடி பழனிசாமியின் தொடர் தோல்வியை குறிப்பிட்டு தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுக்க பார்க்கலாம். இதனால் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் என்பது வாழ்வா -சாவா போட்டியாக அமைந்துள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
அதிமுக கூட்டணியில் தமாகா, ஐஜேகே கட்சிகளுக்கு எத்தனை சீட்? எடப்பாடி பழனிசாமி சொன்ன மேட்டர்! -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
எடப்பாடியின் அரசியல் "மெச்சூரிட்டி".. பாஜக, அமமுகவை அடக்கி.. சத்தமே இன்றி சம்பவம் பண்ணிட்டாரே! -
தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
விஜயகாந்த் முதல் நல்லக்கண்ணு வரை.. சட்டசபை தேர்தலில் மிஸ்ஸாகும் முக்கிய தலைவர்கள்.. லிஸ்ட்டை பாருங்க -
பினாமிகளுக்கு தான் சீட்.. சிவி சண்முகத்திற்கு எதிராக எழுந்த கலக குரல்.. விலகிய அதிமுக நிர்வாகி! -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்
















Click it and Unblock the Notifications