அப்படியே கேன்சலான அதிமுக ஆலோசனை கூட்டம்! திடீரென பறந்த எடப்பாடியின் ஆர்டர்.. இவங்க மட்டும் வரனுமாம்!
சென்னை: அதிமுக ஆலோசனை கூட்டம் கடந்த17ம் தேதி நடைபெற இருந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் தேனி, தென்காசி, ஆரணி உள்ளிட்ட 15 தொகுதி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி 2ஆம் கட்டமாக சந்திப்பார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆலோசிக்க கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக அழைத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து பல தொகுதிகளின் நிர்வாகிகள் சென்னை அதிமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

அப்படி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மீண்டும் சசிகலா, ஓபிஎஸ் ஆகியோரை கட்சிக்குள் கொண்டு வர வேண்டுமென குரல்கள் எழுந்ததாகவும், ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால் அப்படி யாரும் பேசவில்லை, தவறான செய்திகள் வெளியிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக தலைமை எச்சரித்தது.
இந்நிலையில் வரும் நேற்று நடைபெற இருந்த அதிமுக ஆலோசனைக் கூட்டம் தேதி மாற்றப்பட்டது. நேற்று தேனி, திண்டுக்கல், தென்காசி பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால் மொகரம் மற்றும் ஆடி 1 காரணத்தினால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் சசிகலாவின் பயணம் காரணமாகவே கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், அதனையும் அதிமுக தலைமை மறுத்தது.
இந்நிலையில் இந்த நிலையில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் தேனி, தென்காசி, ஆரணி உள்ளிட்ட 15 தொகுதி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி 2ஆம் கட்டமாக சந்திப்பார் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் முடிவுகள் குறித்து, தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டங்கள் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், முதற்கட்டமாக 10.7.2024 முதல் 19.7.2024 வரை நடந்து முடிந்துள்ளன.
இந்நிலையில், இரண்டாம் கட்டமாக 24.7.2024 முதல் 5.8.2024 வரை, ஏனைய நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான, கழக நிர்வாகிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டங்கள் கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி நடைபெறும். 24ஆம் தேதி தேனி - ஆரணி, 25ஆம் தேதி தென்காசி -ஈரோடு, 26 ஆம் தேதி திருப்பூர் - கடலூர், 29ஆம் தேதி திண்டுக்கல் - திருவள்ளூர், 30ஆம் தேதி தூத்துக்குடி - நாமக்கல், 31ஆம் தேதி கள்ளக்குறிச்சி - சேலம், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வடசென்னை- மத்திய சென்னை - தென் சென்னை, ஐந்தாம் தேதி புதுச்சேரி - கரூர் ஆகிய தொகுதிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும்.

நாடாளுமன்றத் தொகுதி வாரியாக நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், 2024, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கழக வேட்பாளர், கழக செய்தித் தொடர்பாளர்கள், மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள் மற்றும் சார்பு அமைப்புகளின் மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சிக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழகச் செயலாளர்கள், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக் குழு வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள் உட்பட மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
கூட்டம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள், அந்தந்த நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள மேற்குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் மட்டும் தவறாமல் கலந்து கொள்ள ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்' என கூறப்பட்டுள்ளது.
-
ஸ்ரீவைகுண்டம் கொடூரம்: “யார் அந்த மேலிடம்? முதல்வரை தாண்டிய பவர் சென்டரா?" விஜய்க்கு எடப்பாடி கேள்வி -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications