எழும்பூர் மக்களே.. மழையால் என்ன பிரச்சனைனாலும் மெசேஜ் பண்ணுங்க! வாட்ஸ் அப் எண் கொடுத்த திமுக எம்எல்ஏ

Subscribe to Oneindia Tamil

சென்னை: எழும்பூர் தொகுதியில் மழை பாதிப்புகள் இருந்தால் மக்கள் தன்னை தொடர்புகொள்ளுமாறு திமுக எம்.எல்.ஏ. பரந்தாமன் ட்விட்டரில் வாட்ஸ் அப் எண்ணை வெளியிட்டு உள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

Egmore DMK MLA Paranthaman gave whatsapp number for complain about Rain related issues

குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார வட மாவட்டங்களில், தஞ்சாவூர் டெல்டா மாவட்டங்களிலும் நேற்று காலை முதலே நல்ல மழை பெய்தது. இந்த நிலையில் இரவு சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த அதி தீவிர மழையால் தற்போது பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எதிர்பாராத விதமாக பெய்த மழையின் காரணமாக சென்னை மாநகரமே ஸ்தம்பித்துபோய் உள்ளது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, "சென்னை மீனம்பாக்கத்தில் 137.6 மிமீ, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 117.0 மிமீ, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 109.5 மிமீ, மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 82.0 மிமீ, ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்) 79.0 மிமீ, நுங்கம்பாக்கம் (சென்னை) 67.4 மிமீ, குட் வில் ஸ்கூல் வில்லிவாக்கம் (திருவள்ளூர்) 50.0 மிமீ, புழல் (திருவள்ளூர்) 46.5 மிமீ, சத்தியபாமா பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) 41.0 மிமீ, LMOIS கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) 40.0 மிமீ, கட்டப்பாக்கம் கேவிகே (காஞ்சிபுரம்) 35.5 மிமீ, மாதவரம் (சென்னை) 34.0 மிமீ என சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது.

Egmore DMK MLA Paranthaman gave whatsapp number for complain about Rain related issues

மற்றொரு தகவலில், சென்னை பெருங்குடி 14 வது மண்டலத்தில் 165 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்து உள்ளதாகவும், காஞ்சிபுரம் அடையாறு எகோ பூங்காவில் 158.7 மிமீ மழையும், செங்கல்பட்டு மாவட்டம் ஆலந்தூரில் 156 மிமீ மழையும் பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் ஜூன் மாதத்தில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை கொட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்று காலையும் சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஈக்காட்டுத்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றன. சென்னை மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் நின்று மீட்பு பணிகள், நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மழை பாதிப்பு தொடர்பாக தொடர்புகொள்ள 1913 என்ற எண்ணுக்கு அழைக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ள சென்னை மாநகராட்சி, மரங்களுக்கு அருகே நிற்க வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் எழும்பூர் திமுக எம்.எல்.ஏ. ஐ பரந்தாமன் ட்விட்டரில் மழை பாதிப்பு இருந்தால் தொகுதி மக்கள் தன்னை தொடர்புகொள்ளுமாறு பதிவிட்டு உள்ளார்.

Egmore DMK MLA Paranthaman gave whatsapp number for complain about Rain related issues

அதில், "சென்னையில் பெய்துவரும் மழையால் எனது #எழும்பூர் தொகுதியில் ஏதேனும் பாதிப்பிருந்தால் தொகுதி பொது மக்கள் எனது கவனத்திற்கு கொண்டுவரலாம். ஏற்கெனவே எனது வாட்ஸ்அப் பாட் எண்( WhatsApp BOT No) 99409 40405 தங்களின் பயன்பாட்டிற்கு உள்ளதை நன்கு அறிவீர்கள். எனவே அதன் வழியாகவும் இந்த Twitter's Inbox வழியாகவும் எனது கவனத்திற்கு கொண்டுவரலாம். விவரம் தருபவர்கள் தங்கள் பகுதியின் Ward No, Street Name, Door No, தங்களின் அலைபேசி எண்ணுடன் விவரங்களை தெரிவிக்கவும்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+