தமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்.. ஒரே நாளில் கிலோவுக்கு 40 ரூபாய் சரிவு
Recommended Video
சென்னை: வெங்காயத்தின் விலை அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில் எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த வெங்காயம் தமிழகத்திற்கு விற்பனைக்கு நேற்று வந்த நிலையில், ஒரே நாளில வெங்காயம் விலை ரூ.40 வரை குறைந்துள்ளது.
மகாராஷ்டிரா, ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தான் வெங்காயம் தமிழகத்துக்கு இறக்குமதியாகும். ஆனால் அங்கு கனமழையால் வெங்காய விளைச்சல் அடியோடு பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக பெரிய வெங்காயம் விலை 20 ரூபாயில் இருந்து படிப்படியாக 150 வரை உயர்ந்தது. சில்லறை விலையில் 40 ரூபாயில் இருந்து 220 ரூபாய வரை உயர்ந்தது.

சாமானியர்கள் பாதிப்பு
வெங்காயம் இல்லாமல் எந்த குழம்பும் வைக்க முடியாது என்கிற நிலையில், வெங்காயத்தின் விலை உயர்வு சாமானிய மக்களை கடுமையாக பாதித்துள்ளது. நாடு முழுவதுமே வெங்காயத்தின் விலை 150ஐ தாண்டியநிலையில் தான் உள்ளது.

அதிரடியாக உயர்வு
இற்கிடையில் தமிழகத்தில் அதிகம் விளையும் சின்ன வெங்காயத்தின் விலையும் படிப்படியாக உயர்ந்து 200 ரூபாயை தொட்டது. இப்படி வெங்காய விலை வாங்க முடியாத அளவுக்க உயர்ந்து கொண்ட போனதற்கு காரணம் வரத்து குறைவு தான் காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

விலை குறைய
வெங்காயத்தின் விலை குறைய வேண்டும் என்றால் இன்னும் குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்கிற நிலை இருப்பதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். ஏனெனில் வெங்காயம் விளைந்து வரவேண்டி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகம் வந்தது
இதற்கிடையே வெங்காயத்தை எகிப்து மற்றும் துருக்கியில் இருந்து இறக்குமதி செய்ய கடந்த மாதம் மத்திய அரசு அனுமதித்து இருந்தது. இதைத்தொடர்ந்து எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தற்போது தமிழகம் வந்துள்ளது. இந்த வெங்காயம் வந்ததால் திருச்சி மொத்த மார்க்கெட்டில் 140க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாய்க்கு குறைந்தது. எனவே மொத்த ஊரிலும் எகிப்து வெங்காயம் விற்பனைக்கு வந்தால் விலை படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications