இப்படியுமா பிள்ளைகள் இருப்பாங்க.. சென்னை வியாசர்பாடியில் வயதான தாய் எடுத்த விபரீத முடிவு
சென்னை: சென்னை வியாசர்பாடியில் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருக்கக் கூடாது என வயதான தாய் தீக்குளித்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை வியாசர்பாடி எஸ் ஏ காலனி முதல் தெருவில் வசித்து வருபவர் வசந்தா. வயது 72. கணவர் இறந்த பிறகு 15 ஆண்டுகளாக வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு மூன்று பிள்ளைகள் ஒரு மகள் இருக்கின்றனர். வசந்தாவின் மகன்கள் மற்றும் மகள் திருமணம் ஆன பிறகு குடும்பத்துடன் தனியாக சென்று விட்டனர்.

தனிமையில் வசந்தா அம்மா
வசந்தாவின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவரை தனியாக விட்டுச் சென்றுள்ளனர். கணவனை இழந்த பிறகு 15 ஆண்டுகளாக தனியாகவே வாழ்ந்து வந்திருக்கிறார். வயசான காலத்திலும் தனியாக வாழ்ந்து வந்த வசந்தா ஆதரவில்லாமல் அதே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ஆதரவு இல்லை
வாடகைக்கு இருக்கும் வீட்டிலிருந்து 7 வீடு தள்ளித்தான் மகன்களும் மகள்களும் வசித்து வந்தாலும், ஆதரவு இல்லாமல் வசித்து வந்ததால், மனவேதனையுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். மேலும் வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவும் ஏற்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிப்பு
இந்நிலையில் பிள்ளைகளுக்கு இனி பாரமாக இருக்கக் கூடாது என இன்று காலை தனக்குத் தானே மண்ணெண்ணையை ஊற்றி கொண்டு தீ வைத்துக் கொண்டுள்ளார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக பார்த்து அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

வியாசர்பாடியில் சோகம்
60 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் உயிருக்குப் போராடும் நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வயதான காலத்தில் பெற்ற பிள்ளைகளுக்கு பாரமாக இருக்ககூடாது என தனக்கு தானே மூதாட்டி தீ வைத்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications