தமிழக மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கு இடைத் தேர்தல்.. ஏப்ரல் 19ல் தேர்தல் திருவிழா
டெல்லி: கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபைத் தொகுதி எம்எல்ஏவாக இருந்த விஜயதாரணி பாஜகவில் இணைந்ததால் அந்த தொகுதிக்கு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழகத்தின் விளவங்கோடுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
விஜயதாரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால் அந்த நிமிடம் முதலே கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அவருடைய எம்எல்ஏ பதவி பறிக்கப்படும். அதற்கேற்ப விஜயதாரணியும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

2024 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தல் தேதி இன்று மதியம் 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதற்காக தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், புதிய தேர்தல் ஆணையர்கள் சுக்வீர் சிங் சந்து, கியானேஷ் குமார் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது தமிழகத்தின் மக்களவை தேர்தல் தேதி வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டது. காலியாக உள்ள தமிழகத்தின் விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கும் உள்பட 13 மாநிலங்களில் உள்ள 26 சட்டசபை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் விளவங்கோடுக்கு முதல் கட்டத்திலேயே இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கும்.
கடந்த 2014 ஆம் தேதி 9 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடந்தது. கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. அந்த தேர்தலுக்கான முடிவுகள் மே 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
விளவங்கோடு தொகுதியின் எம்எல்ஏவாக விஜயதாரணி கடந்த 2 முறை பதவி வகித்த நிலையில் அவருக்கு 2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மீண்டும் வாய்ப்பளித்தது. இந்த நிலையில் அவருக்கு தனது அரசியலை தமிழகத்துடன் சுருக்கிக் கொள்ளாமல் டெல்லி வரை போக வேண்டும் என்ற ஆசை இருந்தது.
இதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட விஜயதாரணி வாய்ப்பு கேட்டதாக தெரிகிறது. அப்போது கிடைக்கவில்லை, மறைந்த எச்.வசந்தகுமாருக்கு வழங்கப்பட்டது. பின்னர் கொரோனா பாதிப்பால் வசந்தகுமார் 2020 ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து 2021 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலுடன் கன்னியாகுமரிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போதும் காங்கிரஸ் தலைமையிடம் விஜயதாரணி முட்டி மோதினார். ஆனாலும் கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு கிடைத்தது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலிலாவது தனக்கு கன்னியாகுமரி தொகுதி வழங்க வேண்டும் என விஜயதாரணி கேட்டு வந்ததாக தெரிகிறது. ஆனால் காங்கிரஸ் தலைமை எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த விஜயதாரணி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
பாஜகவிலாவது கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக விஜயதாரணி அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே அங்கு மூத்த நிர்வாகி பொன் ராதாகிருஷ்ணன் இந்த தேர்தல் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். கடந்த முறை தோல்வி அடைந்த பொன்னார், இந்த முறை கன்னியாகுமரி தொகுதியை விஜயதாரணிக்கு விட்டுக் கொடுப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
-
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
சம்பளத்துடன் விடுமுறை கட்டாயம்.. தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தனியார் நிறுவனங்களுக்கு பறந்த உத்தரவு -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம் -
"327 பார்வையாளர்கள் நியமனம்".. தமிழகத்தை கண்ட்ரோலில் எடுத்த தேர்தல் ஆணையம்.. அதிரடி அறிவிப்பு -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி












Click it and Unblock the Notifications