PMK: மாம்பழம் கிடைத்த குஷி! சென்னை ராயப்பேட்டையில் குவிந்த பாமகவினர்! அன்புமணி என்ன சொல்ல போகிறாரோ!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாம்பழச் சின்னம் அன்புமணி தரப்புக்கே என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இன்றைய தினம் சென்னையில் இளைஞரணி பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அன்புமணி உரையாற்றுகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நீண்ட நாட்களாகவே அதிகாரப் போட்டி இருந்து வருகிறது. இந்நிலையில், அன்புமணி ராமதாஸை பாமக தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை எதிர்த்து ஜி.கே. மணி முதலில் மனு தாக்கல் செய்தார்.

pmk

அப்போது, தாங்கள் எடுத்த முடிவு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலானது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்த விவகாரம் கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அன்புமணி தரப்புக்கு கட்சியின் மாம்பழச் சின்னத்தை ஒதுக்கி, அவரது முகவரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதற்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், அன்புமணி போலி ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து, கட்சி அலுவலக முகவரியை சட்டவிரோதமாக மாற்றியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதைத் தொடர்ந்து, ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.

ராமதாஸ் தாக்கல் செய்த மனுவில், அன்புமணி ராமதாஸின் பதவிக்காலம் 2025 மே மாதத்துடன் முடிவடைந்துவிட்டதாகவும், ஆனால் அவர் இன்னும் தலைவராகச் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். கட்சியின் நிறுவனர் என்ற அடிப்படையில், தனது அனுமதி இல்லாமல் அன்புமணி கூட்டங்களை நடத்தவோ அல்லது எந்த உரிமைகளையும் கோரவோ முடியாது என்றும் அவர் வாதிட்டார். மேலும், பாமகவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அவருக்கு எந்தக் கடிதத்தையும் அனுப்பியிருக்கக் கூடாது; மாறாக, கட்சிச் சின்னம் தொடர்பான அனைத்து தகவல்களும் தனக்குத்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

முன்னதாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாமகவின் மாம்பழச் சின்னத்தை யாருக்கும் ஒதுக்காமல் தற்காலிகமாக முடக்குவதாக தேர்தல் ஆணையம் உறுதி அளித்திருந்தது என்றும், ஆனால் இதுவரை அந்தச் சின்னம் முடக்கப்படாமல் இருப்பது நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்றும் ராமதாஸ் தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த பிப்ரவரி 2 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த வழக்கிற்கு மூன்று வாரங்களுக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, தற்போது தேர்தல் ஆணையம் தனது விளக்கத்தை அளித்துள்ளது. அதில், அன்புமணி ராமதாஸ்தான் பாமகவின் தலைவர் என்பதை தில்லி உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், அன்புமணியின் பதவிக்காலம் 2026 வரை உள்ளது என்பதையும் மறு ஆய்வு விசாரணையின்போது தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்சிகளில் உட்கட்சிப் பிரச்னைகள் ஏற்படுவதற்கு முன்பு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் கட்சியை அங்கீகரிக்க தங்களுக்கு அதிகாரம் உண்டு என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை டெல்லி உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

தேர்தல் ஆணையத்தின் இந்த பதில், ராமதாஸ் தரப்புக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது. இது எதிர்வரும் தேர்தல் களத்தில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சென்னையில் ராயப்பேட்டையில் இன்று காலை 10 மணிக்கு அன்புமணி தரப்பு பாமக இளைஞரணி பொதுக் குழு கூட்டம் நடைபெறுகிறது. பாமக அன்புமணிக்கு சொந்தமானது என தேர்தல் கமிஷன் விளக்கத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ள இந்த கூட்டம் நடப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+