”சார்” பணிகள்.. ஆன்லைனிலேயே படிவத்தை நிரப்பலாம்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. வழிமுறைகள் இதோ
சென்னை: தமிழ்நாட்டில் "சார்" பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வாக்காளர்கள் இனி ஆன்லைன் மூலமாகவும் படிவங்களை பூர்த்தி செய்யலாம் என்று தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் இதற்கான லிங்க் ஒன்றை கொடுத்துள்ளது. கால தாமதத்தை தவிர்க்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த லிங்கில் சென்று எப்படி படிவங்களை பூர்த்தி செய்வது என்பதற்கான வழிமுறைகளையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணியை தேர்தல் ஆணையம் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. தற்போது வீடு வீடாக சென்று படிவங்கள் கொடுத்து வாக்காளர்கள் விவரங்களை தேர்தல் அலுவலகர்கள் பூர்த்தி செய்யும் பணியினை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாட்டில் சார் பணிகள்
இந்த பணியானது வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 5 நாட்கள் ஆகியும் இன்னமும் நிறைய இடங்களில் தேர்தல் அலுவலர்கள் மக்களுக்கு படிவங்களை கொடுக்கவில்லை. ஏற்கனவே ஒரு மாதம் காலம் என்பது மிகவும் குறைவு என்றும், அவசர அவசரமாக எப்படி செய்ய முடியும் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
தமிழகத்தில் ஆளுங்கட்சி திமுகவும் "சார்" பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்திலும் சார் பணிகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக கூட்டணி கட்சிகளும், தவெகவும் சார் பணிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக குறைந்த கால நேரத்தில் இந்த பணியினை எப்படி செய்ய முடியும், அவசர கதியில் பணியினை மேற்கொண்டால் பல்வேறு குளறுபடிகள் ஏற்படும் எனவும் தெரிவித்து வருகின்றன.
ஆன்லைன் மூலமாக நிரப்பலாம்
இந்த நிலையில் தான் தேர்தல் ஆணையம் ஆன்லைன் மூலமாகவும் படிவத்தை பூர்த்தி செய்யும் வசதியினை கொண்டு வந்துள்ளது. இதனால் கால விரயத்தை தவிரிக்க முடியும் என்றும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கருதுகிறார்கள். இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
வாக்காளர்கள் வசதிக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளமான https://voters.eci.gov.in- ல் கணக்கீட்டு படிவத்தை 'ஆன்லைன்' மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்னை பயன்படுத்தி இணையதளம் மூலம் உள் நுழையலாம்.
செல்போன் எண்ணுக்கு ஓடிபி
இதற்கு பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (ஓ.டி.பி.எண்) அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளிட வேண்டும். அதன்பின்னர் அந்த இணைய பக்கத்தில் காட்டப்படும் 'கணக்கீட்டு படிவம்' (Fill Enumeration Form) என்ற இணைப்பை தேர்வு செய்யலாம்.
வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணையப்பக்கத்தில் கோரப்படும் தேவையான விவரங்களை நிரப்ப வேண்டும். சரியான விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு இணைய பக்கமானது 'e-sign' பக்கத்திற்கு மாறும். அதன் பின்னர் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு மீண்டும் ஒரு முறை ஓ.டி.பி. எண் அனுப்பப்படும். அந்த எண்ணை உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாக பதிவேற்றப்படும். என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications