தேர்தல் ஆணைய கூட்டம்! அருகருகே அமர்ந்த இபிஎஸ், ஓபிஎஸ் டீம்! செம ட்விஸ்ட்! தொடங்கிய முக்கிய மீட்டிங்
சென்னை: அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை செய்கிறார். இதற்கான கூட்டம் தற்போது தொடங்கி உள்ளது. ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைப்பது தொடர்பாக இதில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பணிகள் நாடு முழுக்க நடக்க உள்ளது. இதற்காக மாநில வாரியாக மாநில தேர்தல் ஆணையம் தலைமையில் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் மாநில தேர்தல் ஆணையம் சார்பாக இன்று கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் ஆணையம்
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக சார்பாக இந்த கூட்டத்தில் யார் கலந்து கொள்வார் என்ற கேள்வி எழுந்தது. அதிமுகவில் தற்போது இரண்டு அணி உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அணி, ஓ பன்னீர்செல்வம் அணி. அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் நான்தான் என்று எடப்பாடி பழனிசாமி தீவிரமாக சொல்லி வருகிறார். பொதுக்குழுவில் என்னைதான் பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர், என்று எடப்பாடி கூறி வருகிறார்.

மீட்டிங்
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வமோ பொதுக்குழுவோ சட்ட விரோதமாக நடந்தது என்று கூறி வருகிறார். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. அதிமுகவில் நிலவும் இந்த மோதல் தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகளை பொறுத்தே அதிமுகவின் எதிர்காலம் அமையும். இந்த நிலையில்தான் தேர்தல் ஆணையத்தின் அனைத்து கட்சி கூட்டத்திற்கு யார் அழைக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்தது.

சந்திப்பு
ஏனென்றால் தேர்தல் ஆணையம் இரண்டு அதிமுக அணியில் எதை அழைக்கிறதோ, அந்த அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பது போல ஆகிவிடும். இதனால் தேர்தல் ஆணையம் யாரை அழைக்கும் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் ஆணையம் அழைப்பிதழை அனுப்பியது. அலுவலகம் எடப்பாடி கட்டுப்பாட்டில் இருப்பதால், அது எங்களுக்கு வந்த அழைப்பு என்று எடப்பாடி தரப்பு வாதம் வைத்தது.

எடப்பாடி
இதையடுத்து எங்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க வேண்டும். தேர்தல் ஆணையத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு உள்ளதால் எங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. இதை ஏற்றுக்கொண்டு ஓ பன்னீர்செல்வம் தரப்பிற்கும் தேர்தல் ஆணையம் அழைப்பிதழ் அனுப்பியது. இதையடுத்து இன்று தேர்தல் ஆணைய ஆலோசனையில் அதிமுக சார்பாக 2 அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
Recommended Video

ஓபிஎஸ்
ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இருவரும் தங்கள் சார்பாக நிர்வாகிகளை அனுப்ப உள்ளனர். எடப்பாடி சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், இன்பதுரை ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர் . அதேபோல் ஓபிஎஸ் சார்பில் கோவை செல்வராஜ் கலந்து கொள்வார் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் இரண்டு தரப்பிற்கும் அழைப்பு விடுத்துள்ளது முக்கியமாக பார்க்கப்படுகிறது. இரண்டு தரப்பையும் தேர்தல் ஆணையம் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.












Click it and Unblock the Notifications