மிச்சமுள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத் தேர்தல்
4 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் மே 19 நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

சென்னை: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், மிச்சம் உள்ள 4 சட்டசபைத் தொகுதிகளுக்கும் மே 19ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகிற 18-ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கூடவே 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் உச்ச கட்டத்தில் உள்ளது.
அதேசமயம், காலியாக உள்ள திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் சூலூர் சட்டசபைத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

அறிவிப்பு
வழக்குகளை காரணம் காட்டி தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த தொகுதிகளில் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்றும் திமுக வழக்கு தொடுத்தது. இதையடுத்து, இந்த 4 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேட்புமனு
இந்த நிலையில், இந்த தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மே 19ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு தொகுதிகளுக்குமான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 22ம் தேதி ஆரம்பமாகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 29.

4 தொகுதிகள்
மே 23ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது இந்த நான்கு தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

லோக்சபா தேர்தல்
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கு பொதுத் தேர்தலும், 22 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தலும் நடைபெறுகிறது. தமிழகத்தில் இதுவரை இந்த அளவுக்கு அதிகமான தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெற்றதில்லை என்பதால் வரலாற்றில் இடம் பெறுகிறது.












Click it and Unblock the Notifications