Election Exclusive: அதெல்லாம் முடியாது..பாஜகவுக்கு பல்ப் கொடுத்த அதிமுக! 72 லட்சியம்..35 நிச்சயம்! கமலாலயம் போட்ட கணக்கு
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், பாஜக தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை அதிமுக தலைமையிடம் வழங்கியுள்ளது. அதில் 35 தொகுதிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கடந்த தேர்தலைப் போல 25 தொகுதிகளுக்குள் மட்டுமே ஒதுக்க முடியும் என அதிமுக திட்டவட்டமாக கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பாமக அல்லாது 40 தொகுதிகளைஒதுக்கு அதனை ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளுக்கு பாஜக பிரித்துக் கொடுக்க சொல்ல அதிமுக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் தொடங்கிவிட்டன 2021ல் இருந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க வேண்டும் என தீவிரமாக காய் நகர்த்தி வருகிறது அதிமுக. இந்த முறை
தேசிய ஜனநாயகக் கூட்டணியோடு அதிமுக இந்தத் தேர்தலை சந்திக்கிறது.
தேர்தல் நெருங்கி வரும் இந்த சூழலில் கூட்டணி கட்சிகள் தங்கள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளிடம் வழங்கி வருகின்றன. அந்த வகையில், பாஜக போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை நேரடியாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதிமுக பாஜக கூட்டணி
இந்தப் பட்டியலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோர் வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 72 தொகுதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 30 முதல் 35 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சென்னை நகரில் முக்கியமாக கருதப்படும் ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், வேளச்சேரி உள்ளிட்ட தொகுதிகள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தொகுதி பங்கீடு
நகர்ப்புற வாக்காளர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கட்சி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்குப் பிறகு திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, ஆவடி போன்ற தொகுதிகளும் கோரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் காஞ்சிபுரம், தளி, ஆலங்குளம், தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்கு ஆதரவு கிடைக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது என மதிப்பிடப்படும் சில முக்கிய தொகுதிகளையும் பாஜக தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக போட்டியிடும் தொகுதிகள்
திருவண்ணாமலை, சிங்காநல்லூர், அரவக்குறிச்சி, பழநி, விளவங்கோடு, நாகர்கோவில் போன்ற பகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தொகுதிகள் கட்சியின் விருப்பப்பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிசாமி முடிவு
கூட்டணிக்குள் உள்ள கட்சிகள் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்தி வரும் சூழலில், இறுதி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜக கேட்ட தொகுதிகளை தர எடப்பாடி பழனிச்சாமி முன்வரவில்லை என சொல்லப்படுகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 25 தொகுதிகளுக்குள் மட்டுமே பாஜக போட்டியிட்ட நிலையில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற போது கிடைத்த வாக்குகளின் அடிப்படையில் 25 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல்
மேலும் அதிமுக வலுவாக உள்ள தொகுதிகளை பாஜக கேட்டிருக்கும் நிலையில் எக்காரணத்தை கொண்டும் பாஜகவுக்கு அந்த தொகுதிகளை ஒதுக்க முடியாது எனவும், கடந்த மக்களவைத் தேர்தலில் குறிப்பிட்டு தகுந்த வாக்குகளை பெற்ற தொகுதிகளை மட்டுமே தரவ முடியும். அதுவும் அதிமுகவினர் போட்டியிட விருப்பம் தெரிவிக்காத தொகுதிகளாக இருக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டமாக தெரிவிப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் சற்றே சுனக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில் விரைவில் பேச்சுவார்த்தைகள் மூலம் இந்த தொகுதி பங்கீடு நிறைவு செய்யப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
-
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
எடப்பாடிக்கு டிமிக்கி கொடுக்கும் 11 பேர்.. எஸ்கேப்பாகும் வேலுமணி.. அதிர்ச்சிக்கு ரெடியாகிறதா அதிமுக? -
வேலுமணி அணி வைத்த டிமாண்ட்.. எடப்பாடி பழனிசாமி என்ன சொன்னார்? அதிமுகவுக்கு குட் நியூஸ்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
எடப்பாடியிடம் சீறிய சிவி சண்முகம்.. மன்னிப்பு கடிதம் எழுதி தரவேண்டுமா? தந்தால் இமேஜ் என்னவாவது? -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
தேன்கூட்டில் கல்லெறிந்ததா தவெக? வேலுமணி கிட்ட சிவி சண்முகம் கேட்ட அந்த கேள்வி? அப்ப எடப்பாடி முடிவு? -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
சிவி சண்முகத்துக்கு கடைசி சான்ஸ் இதுதான்! எடப்பாடியின் முன் மண்டியிடும் 14 பேர்! பின்னணி காரணம் என்ன -
கொக்கு போல் காத்திருந்த எடப்பாடி.. சீனியர்களை சின்னாபின்னாம்மாக்கி மாஸ்! இப்படி ஒரு ப்ளானா? சூப்பர்! -
சிரித்து சமாளித்த எடப்பாடி.. வேலையைக் காட்டிய வேலுமணி! வெறுப்பில் சிவி சண்முகம்! இனிமே தான் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications