Election Exclusive: அல்வா மாதிரி 6 சீட்.. அள்ளிட்டுப் போகப் போறாங்க அண்ணியார்! வெறுப்பில் விசிக? தவிக்கும் தவாக? பரபர
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சேர்ந்துள்ள சூழலில், தொகுதி பங்கீடு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது. தேமுதிகவுக்கு சுமார் 6 தொகுதிகள் ஒதுக்க திமுக முன்வந்ததாக வெளியாகிய தகவல்கள், கூட்டணிக்குள் உள்ள பிற கட்சிகளில் அதிருப்தி உணர்வை கிளப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாளை முதல் திமுக தொகுதி பேச்சுவார்த்தைகளை துவக்கவுள்ள நிலையில், உரசல்கள் அதிகரிக்கலாம் என சொல்லப்படுகிறது.
மறைந்த நடிகர் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக, ஆரம்பத்தில் தனித்து போட்டியிட்டு குறிப்பிடத்தக்க ஓட்டு விகிதம் பெற்றாலும், பின்னர் பல்வேறு கூட்டணி மாற்றங்களை சந்தித்தது. சமீப காலங்களில் கட்சியின் வாக்கு வங்கியானது சற்றுக் குறைந்திருந்தது.
இருந்த போதிலும், திமுக கூட்டணியில் இணைந்திருப்பது அதன் அரசியல் மீளுருவாக்க முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இதேவேளை, திமுக கூட்டணிக்குள் சீட் பங்கீடு தான் தற்போது முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

திமுக தேமுதிக கூட்டணி
அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் தகவல்களின் படி, தேமுதிக முதலில் 13 தொகுதிகள் அடங்கிய உத்தேசப்பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கியதாக கூறப்படுகிறது. கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கே.வி.குப்பம், விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருதாச்சலம், கடலூர் போன்ற பகுதிகள் உள்ளிட்ட பல தொகுதிகள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோயம்புத்தூர் வடக்கு, மதுரை மத்திய, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளும் பட்டியலில் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
தொகுதி பங்கீடு
இந்த கோரிக்கைகளை ஆராய்ந்த திமுக, அனைத்து தொகுதிகளையும் வழங்க இயலாது என்றாலும், சுமார் 6 தொகுதிகள் வழங்கும் வாய்ப்பை பரிசீலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில தொகுதிகள் மாற்று தேர்வுகளாக முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரிஷிவந்தயம் அல்லது விருத்தாச்சலம், சிவகாசி அல்லது விருதுநகர், விருகம்பாக்கம் விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டி, பல்லாவரம், பாப்பிரெட்டிபட்டி, சேலம் தெற்கு ஆகிய தொகுதிகளை தர திமுக முன் வந்ததாக சொல்லப்படுகிறது.
பிரேமலதா விஜயகாந்த் போட்டி
இதில் ரிஷிவந்தியும் அல்லது விருதாச்சலத்தில் பிரேமலதா விஜயகாந்த், சிவகாசி, விருதுநகர் அல்லது சாத்தூரில் விஜய பிரபாகரன், விருகம்பாக்கத்தில் பார்த்தசாரதி, விழுப்புரம் அல்லது விக்கிரவாண்டியில் வெங்கடேசன், பல்லாவரத்தில் அனகை முருகேசன், பாப்பிரெட்டிப்பட்டியில் இளங்கோவன், சேலம் தெற்கில் அழகுபுரம் மோகன்ராஜ் ஆகியோர் போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது. கூடுதலாக ராஜ்யசபா சீட்டு எல்கே சுதீஸுக்கு தரப்படலாம் என்கின்றனர்.
கூட்டணி அரசியல்
இந்நிலையில் திமுகவின் இந்த முடிவு கூட்டணிக்குள் உள்ள பிற கட்சிகளுக்குள் மோதும் சூழலை உருவாக்கியதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகள் தங்களுக்கு கிடைக்கக்கூடிய தொகுதிகள் குறையலாம் என்ற அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் விசிக பெற்ற தொகுதிகள் மற்றும் வெற்றி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு, இம்முறை குறைவான தொகுதிகள் வழங்கப்பட்டால் அதிருப்தி அதிகரிக்கலாம் என்ற மதிப்பீடும் முன்வைக்கப்படுகிறது.
திமுக பேச்சுவார்த்தைக் குழு
இந்நிலையில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த திமுக தலைமையிலான பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு தலைமை தாங்கும் இந்த குழுவில், ஆ.ராசா, எ.வ.வேலு உள்ளிட்ட பல அமைச்சர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு, கூட்டணியின் கட்டுகோப்பை பாதிக்காத வகையில் முடிவெடுக்க முயற்சிக்கும் என கூறப்படுகிறது. தொகுதி பங்கீடு என்பது வெறும் எண் கணக்கல்ல; அது ஒவ்வொரு கட்சியின் அரசியல் மரியாதை, வாக்கு வங்கி மற்றும் எதிர்கால வளர்ச்சியை எடுத்துக்காட்டும் அம்சமாக கருதப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல்
ஒரு தரப்பு, புதிய கூட்டணி அமைவது தேர்தல் கணக்கை சாதகமாக அமைக்கு என கருதுகிறது. சிறிய அளவிலான வாக்கு சதவீதங்களும் சில தொகுதிகளில் வெற்றி-தோல்வியை தீர்மானிக்கக் கூடியவை என்பதால், கூட்டணியின் விரிவாக்கம் முக்கியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். மற்றொரு தரப்பு, ஏற்கனவே இருக்கும் ஒத்துழைப்பு இல்லாமல் வெறும் கூட்டணி விரிவாக்கம் பயனளிக்காது என எச்சரிக்கிறது. இதனால், தேமுதிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற தகவல் வெறும் எண்ணிக்கையாக மட்டுமல்லாமல் சக கூட்டணி கட்சிகளின் கௌரவம் மற்றும் பலத்தை சோதித்து பார்ப்பது போல இருக்கிறது என்கின்றனர். எந்த சிக்கலும் இல்லாமல் திமுக எப்படி தொகுதி பங்கீட்டை முடிக்கப் போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.
-
1000 சவரன் தங்க நகை, மகளுக்கு கடன்! விஜய்யின் சொத்து பத்திரத்தில் முரண்பாடு? திமுக புள்ளி கூறுவதென்ன -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
181–189 தொகுதிகளில் வெற்றி.. மீண்டும் வெல்லும் திமுக கூட்டணி.. அதிமுக – தவெகவிற்கு ஷாக் தந்த சர்வே -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அடிதடி..கோஷ்டி பூசல்! பழைய ஃபார்முக்கு திரும்பிய காங்கிரஸ்! செல்வப் பெருந்தகைக்கு எதிராக திரண்ட டீம் -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
ஓஎஸ் மணியன் ஏமாற்றிவிட்டார்.. சீட் தராததால் அதிமுக சீர்காழி முன்னாள் எம்.எல்.ஏ கட்சி பதவி ராஜினாமா! -
‘கேமரா'வில் போட்டி.. வீரப்பன் மனைவிக்கு வாய்ப்பு..100 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த தவாக -
மார்க்சிஸ்ட் அரசியல் வரலாற்றில் முதன்முறை! மதுரையில் போட்டியிடாத சிகப்பு சட்டை தோழர்கள்! என்னாச்சு? -
176 தொகுதிகளில் உதயசூரியன்! சீர்காழி தொகுதியிலும் தனிச் சின்னம் வேண்டாம்.. வைகோ எடுத்த அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications