Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தலில் ராமதாஸ் சசிகலா கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இதை அடுத்து தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக நேரடியாக ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில் தென்னந்தோப்பு சின்னத்தில் சசிகலாவும், தேங்காய் சின்னத்தில் ராமதாசும் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பிலும், தொகுதி பங்கீட்டிலும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில், நீண்டநாளாக என்ன முடிவெடுக்கப் போகிறார்கள்? எதிர்பார்ப்பில் இருந்த சசிகலா மற்றும் ராமதாஸ், நேற்று நேரில் சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.
அந்த சந்திப்பின் முடிவில், வரவிருக்கும் தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக இருவரும் அறிவித்துள்ளனர். இந்த புதிய கூட்டணி அமைப்பின் மூலம் தமிழகத்தில் இந்த முறை ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ளது.

2026 தமிழக சட்டசபைத் தேர்தல்
ஏற்கனவே திமுக தலைமையிலான கூட்டணி 26 கட்சிகளை இணைத்து மெகா கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. அதேபோல் எதிர்க்கட்சியான அதிமுக தலைமையிலான கூட்டணியும் பாஜக மற்றும் அமமுக உள்ளிட்ட 14 கட்சிகளுடன் மிகப்பெரிய கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனித்து தேர்தலை சந்திக்கத் தயாராகி வருகிறது. அதேபோல், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் வழக்கம்போல தனித்தே தேர்தல் களத்தில் களம் இறங்க உள்ளது.
சசிகலா ராமதாஸ் கூட்டணி
இதற்கிடையில், முன்னதாக ஓ பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் ராமதாஸ் ஆகியோர் தனித்துப் போகும் சூழல் ஏற்பட்டிருந்தது. ஆனால் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் இணைந்ததாக தகவல்கள் வெளியாகிய நிலையில், சசிகலா புதிய கட்சியைத் தொடங்கியிருந்தார். மறுபுறம், ராமதாஸ் தலைமையிலான தரப்பும் கூட்டணி குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவதாகக் கூறி வந்தது. இந்த நிலையில் நடைபெற்ற சந்திப்பின் மூலம், சசிகலா-ராமதாஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக உருவானது.
தென்னந்தோப்பு சசிகலா
இந்த கூட்டணிக்கான சின்ன விவகாரமும் தற்போது கவனம் பெற்று வருகிறது. தேர்தல் ஆணையம் சசிகலா தலைமையிலான கட்சிக்கு 'தென்னந்தோப்பு' சின்னத்தை ஒதுக்கியுள்ளது. அதேவேளையில், ராமதாஸ் தரப்பு கோரிய 'மாம்பழம்' சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் அவர் 'தேங்காய்' சின்னத்தில் போட்டியிடும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தேங்காய் ராமதாஸ்
கூட்டணி அறிவிப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "எங்கள் கொள்கைக்கு ஏற்ற கட்சிகள் எங்களுடன் இணைந்து கொள்ளலாம். அப்படி வரும் பட்சத்தில், நானும் சசிகலாவும் இணைந்து ஆலோசித்து முடிவு எடுப்போம். தமிழக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த கூட்டணியை அமைத்துள்ளோம். சில நேரங்களில் தாமதம் ஏற்படுவது இயல்பானதே. அந்த வகையில் இந்த கூட்டணி தாமதமாக அறிவிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல்
இதற்கிடையில், அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வருவது குறிப்பிடத்தக்கது. பாமக தலைமையைச் சுற்றி இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த வழக்கும் தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மொத்தத்தில், சசிகலா-ராமதாஸ் கூட்டணி அறிவிப்பு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வரவிருக்கும் தேர்தலில் பல முனைப் போட்டி உருவாகும் சூழலை உறுதிப்படுத்தியுள்ளது.
-
சிறிய கட்சிகளுக்கு தாமரை சின்னம்.. வாக்கு வங்கியை காக்க பாஜக ஐடியா.. எடப்பாடி காதுக்கு போன மெசேஜ்! -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
இது திமுக கோட்டை.. அதிமுகவுக்கு ஒத்துவராது.. சென்னையை கூட்டணி கட்சியிடம் தாரைவார்க்க தயாரான எடப்பாடி -
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
யார் பெரிய தலை? கதர் கட்சியில் ’கை’கலப்பு! 2 ஆக பிரிந்த நிர்வாகிகள்! டெல்லிக்கு சென்ற பஞ்சாயத்து! -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
இரட்டை இலை சின்னத்தில் ஆம்ஸ்ட்ராங் மனைவி போட்டி? எடப்பாடி போடும் அதிரடி பிளான்! -
பறக்கும் படையிடம் சிக்கிய பணத்தை மீட்பது எப்படி? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! -
விஜய் குடுமி சங்கீதா கையில்.. தேர்தலிலேயே நிற்க முடியாது? எலக்சன் நேரத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்! பரபர -
ஒரு கை பார்த்துற வேண்டிதான்.. பலத்தை காட்ட தயாராகும் சீனியர்கள்! சசிகலாவுடன் கைகோர்க்கும் ராமதாஸ்? -
ஓரே வருஷத்தில் மதுக்கடைகள் மூடப்படும்.. கல்விக்கடன் தள்ளுபடி.. சீமான் தேர்தல் வாக்குறுதி -
கோவையை விடமாட்டோம்.. 3 தொகுதிகளை குறிவைத்த காங்கிரஸ்.. திமுக கூட்டணியில் முட்டி மோதும் கட்சிகள்















Click it and Unblock the Notifications