Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Election Exclusive: எங்க ஏரியா உள்ள வராதீங்க.. இன்னும் லிஸ்டே வரலை அதுக்குள்ள அலப்பறையா? ’வீரா’வால் வேடசந்தூரில் மோதல்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தயாராகி வரும் நிலையில் சென்டிமென்டான வேடசந்தூர் தொகுதியில் வெடித்திருக்கும் மோதல் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தன்னை தலைமை வேட்பாளராகவே அறிவித்து விட்டதாக காட்டிக் கொள்வது போல முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான வீரா சாமிநாதன், வேடசந்தூர் தொகுதி முழுக்க சுற்றி வருவது திமுக உடன் பிறப்புகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. சிட்டிங் எம்எல்ஏவான காந்திராஜனம் கடும் கோபத்தில் இருக்கிறாராம்!

தமிழகத்தை பொறுத்தவரை சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் வேடசந்தூர் தொகுதிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. இதுவரையிலான சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் வேடசந்தூரில் எந்த கட்சி ஜெயிக்கிறதோ அல்லது எந்த கூட்டணியின் கட்சி ஜெயிக்கிறதோ அவர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள் என்பது இதுவரை மாறாமல் தொடர்ந்து வரும் வரலாறு.

திண்டுக்கல் மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதியான வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி. நாடாளுமன்றத் தொகுதியில் கரூர் தொகுதிக்குள் வருகிறது. தற்போது அங்கு தான் பிரச்சனை வெடித்திருக்கிறது. தற்போது சிட்டிங் எம்எல்ஏவாக காந்தி ராஜன் இருக்கிறார்.

TN Election Exclusive Tamil Nadu Assembly Election 2026 Vedasandur

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி

அதிமுகவில் துணை சபாநாயகராக இருந்தவர். இந்நிலையில், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார். 2014 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிமுகவின் உதயகுமாரிடம் தோல்வியை தழுவினார். அதற்கு பிறகு அரசியலில் தலை காட்டாத அவர் 2021 சட்டமன்றத் தேர்தலில் வேடசந்தூரில் விபிபி பரமசிவத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். அதற்குப் பிறகு அவரது அரசியல் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியது. இந்த நிலையில் தொகுதியில் காந்தி ராஜனுக்கு லேசான அதிருப்தி அலை எழத் தொடங்கி இருக்கும் நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட வாய்ப்பு குறைவு என சொல்லப்படுகிறது.

2026 சட்டமன்ற தேர்தல்

இதனை பயன்படுத்திக் கொண்டு திமுகவில் இருக்கும் முன்னணி தலைவர்கள் தலைமையிடம் பேசி எம்எல்ஏ சீட்டை பெற்று விட வேண்டும் என தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளரான வீரா சாமிநாதன் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் பலவற்றை நடத்திவரும் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனையில் சிக்கி விசாரணையில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவானவர் எனவும், டாஸ்மாக் வசூல் உள்ளிட்ட விவகாரங்களை கவனித்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது.

வீரா சாமிநாதன்

மேலும் அமைச்சர் சக்கரபாணிக்கு நெருக்கமானவராகவும் கருதப்படுகிறார். இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பல வாரங்கள் இருக்கும் நிலையில் திமுக தலைமை இதுவரை கூட்டணி பேச்சு வார்த்தையையே துவக்க வில்லை. அதற்குள் திண்டுக்கல் மாவட்டத்தில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் போல வீரா சாமிநாதன் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட எரியோடு, கோவிலூர், குஜிலியம்பாறைம் பாளையம்ம் அய்யலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்து எம்எல்ஏ போலவே நலம் விசாரிப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார்.

எம்எல்ஏ காந்தி ராஜன்

சிட்டிங் எம்எல்ஏ காந்தி ராஜனே சற்று அடக்கி வாசிக்கும் நிலையில் சாமிநாதனின் இந்த செயல்கள் திமுக உடன் பிறப்புகளை கொந்தளிக்க வைத்துள்ளது. குறிப்பாக வேடசந்தூர் தொகுதியில் வடக்கு, தெற்கு, பேரூர் என பல ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு செயலாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு சென்று சாமிநாதன் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மக்களிடம் நலம் விசாரிப்பது என தேர்தல் பிரச்சாரத்தை போலவே செய்து வருகிறார் என குற்றம் சாட்டப்படுகிறது.

திமுக உட்கட்சி மோதல்

இந்த நிலையில்தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேடசந்தூர் வடக்கு ஒன்றியத்தில் பெண் நிர்வாகியின் கட்டுப்பாட்டில் உள்ள ஊருக்குள் சென்று வீரா சாமிநாதன் பிரச்சாரம் செய்வது போல பொதுமக்களை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த பெண் நிர்வாகி, "தம்பி நீங்கள் அமைச்சரின் ஆதரவாளராக இருக்கலாம். ஆனால் இன்னும் உங்களை வேட்பாளராக அறிவிக்கவில்லை. தெற்கு ஒன்றிய செயலாளரான நீங்கள் வடக்கு ஒன்றியத்திற்குள் வந்து இப்படி செய்யக்கூடாது. உங்களை வேட்பாளராக அறிவித்த பிறகு நீங்கள் இந்த பகுதிக்கு வரலாம்" என வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

வேட்பாளர் போட்டி

தற்போதைய சூழலில் வேடசந்தூரில் பல்வேறு திமுக தலைவர்கள் எப்படியாவது சட்டமன்ற வேட்பாளர் சீட்டை பெற்று விட வேண்டும் என முட்டி மோதி வருகின்றனர். தற்போதைய சூழலில் எட்டு பேர் திமுக வேட்பாளர் ரேசில் இருப்பதாக சொல்லப்படுகிறது இதில் வேடசந்தூர் தொகுதியில் மட்டுமே 4 பேர் முன்னணியில் இருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் உடனான சந்திப்பில் அவர்களை முதல்வர் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி

சூழல் இப்படி இருக்க," முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர், அவரது பினாமி, டாஸ்மாக் வசூல் விவகாரங்களை கவனித்துக் கொள்வதால் தன்னை வேட்பாளர் எனவே காட்டிக்கொண்டு பிற நிர்வாகிகளை ஓரங்கட்டி வருகிறார் சாமிநாதன் எனவும், சக நிர்வாகிகளை அழைக்காமல் தனது ஆதரவாளர்களை அழைத்துக் கொண்டு வேடசந்தரின் அனைத்து பகுதிகளுக்கும் சுற்றி வருவதால் கட்சி நிர்வாகிகள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். அதே நேரத்தில் முக்கிய முன்னாள் அமைச்சரின் ஆதரவாளராக இருப்பதால் தலைமைக்கு எங்களால் புகார் அளிக்க முடியவில்லை. நீங்களாவது சொல்லுங்களேன்" என நம்மிடம் புலம்பினர் திமுக உடன் பிறப்புகள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+