Election Exclusive: பாஜகனு ஒரு வார்த்தை கூட வாயிலையே வரலையே! ரோல் மாடல் கொடுத்த அட்வைஸ்! சேலத்தில் அடக்கி வாசிச்ச விஜய்!
சென்னை: தமிழக அரசியலில் புதிய வரவான தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிரச்சார நிகழ்வுகளில் தொடர்ந்து அதிமுக -திமுக -பாஜக என முக்கிய கட்சிகள் அனைத்தையும் விமர்சித்து வந்தார். ஆனால் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுகவை மட்டுமே டார்கெட் செய்து பேசியது கவனிக்கத்தக்கது. இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவுறுத்தலின் பெயரில் தான் விஜய் பாஜக விமர்சனத்தை தவிர்த்தார் என்கின்றனர். மேலும் ஜனநாயகன்பட விவகாரமும் இதன் பின்னணியில் இருக்கலாம் என சொல்லப்படுகிறது.
சேலம் நகரில் நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் விஜய் ஆற்றிய உரை தமிழக அரசியலில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. வழக்கம் போல் திமுகவைவும், அதன் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினையே முழுவதுமாக டார்கெட் செய்திருந்தது அவர் பேச்சு.
தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டம் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள கே.வி.பி. கார்டன் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் உரையாற்றிய பின், கட்சித் தலைவர் விஜய் உரையாற்றினார். தன் உரையில் அவர் முக்கியமாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை மட்டுமே கடுமையாக விமர்சித்தார்.

விஜய் சேலம் பேச்சு
நிகழ்ச்சியில் பேசிய அவர்," மக்களை ஏளனமாகப் பார்க்கும் அரசியல் பண்பாட்டுக்கு மாற்றாக மக்கள் நலனில் மையம் கொண்ட ஆட்சி தேவை, தமிழ்நாடு ஒரு மாநிலமாக மட்டுமல்ல, தனது "வீடு". என்னையும் எனது கட்சியையும் குறைத்து மதிப்பிடும் அரசியல் எதிரிகளுக்கு மக்கள் ஆதரவே பதிலாக இருக்கும். தனித்து அரசியல் கட்சி தொடங்கி மக்களிடம் செல்வாக்கு பெற்றிருப்பது பெரிய சாதனை. தவெக தமிழகத்தின் பெரிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது. தற்போதைய ஆட்சியை மக்கள் விரும்பவில்லை என்றும், மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். மக்களை நேசிக்கும் மனப்பான்மை இருந்தால் நல்லாட்சி சாத்தியம் என்றார்.
விஜய் பாஜக மௌனம்
சமீப காலமாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி குறித்து விமர்சனங்கள் முன்வைத்து வந்த விஜய், சேலம் கூட்டத்தில் அவற்றின் பெயர்களைக் கூட குறிப்பிடாமல் தவிர்த்தது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. திமுகவே முக்கிய அரசியல் எதிரி என அவர் குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
ஜெகன் மோகன் ரெட்டி
இந்த மாற்றத்திற்கான பின்னணி குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. முக்கியமாக ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உடனான சந்திப்பே காரணம் என சொல்லப்படுகிறது. சென்னையில், சமீபத்தில் ஜெகன்மோகன் ரெட்டி இல்ல திருமண நிகழ்வில் விஜய் கலந்து கொண்டர். பின்னர் நடைபெற்ற தனிப்பட்ட சந்திப்பில் அரசியல் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போதுதேவையற்ற அரசியல் மோதல்களைத் தவிர்த்து முக்கிய எதிரியை மட்டுமே குறிவைத்து பேச வேண்டும் என ஜெகன் விஜய்க்கு அறிவுரை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனநாயகன் படம்
இந்த ஆலோசனையின் தாக்கமே சேலம் கூட்டத்தில் அவரது பேச்சு மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மற்றொரு காரணத்தையும் அரசியல் பார்வையாளர்கள் இங்கே குறிப்பிடுகின்றனர். விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகியுள்ள ஜனநாயகன் படம் இன்னும் வெளிவராமல் இருக்கிறது. தணிக்கை குழு உடனான மோதல் காரணமாக படத்தை வெளியிட முடியாமல் பட நிறுவனம் தவித்து வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
நீதிமன்ற வழக்குகளும் கை கொடுக்காத நிலையில் தற்போது வழக்கு வாபஸ் பெறப்பட்டு மறுத்தணிக்கைக்கு சென்று இருக்கிறது. இந்த நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி மூலமாக விஜய் அமைதியாக இருந்தால் படத்தை வெளியிட உதவுவதாக டெல்லி மேலிடம் சொன்னதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து தனது பேச்சில் பாஜகவை பெயரை உச்சரிக்காமல் விஜய் அடக்கி வாசித்தார் என்கின்றனர்.












Click it and Unblock the Notifications