வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்!
சென்னை: தமிழகத்தில் முழு நேர டிஜிபி நியமன விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருவதால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் சில அதிரடி நடவடிக்கைகளை தலைமைத் தேர்தல் ஆணையம் எடுக்கவிருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.
தமிழக டிஜிபி சங்கர் ஜீவால் ஓய்வு பெற்றதை அடுத்து முழு நேர டிஜிபியை தமிழக அரசு நியமிக்கவில்லை. அந்த பதவியை பொறுப்பு என்கிற அளவிலேயே வைத்திருக்கிறது. பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமனை நியமித்த தமிழக அரசு, முழு நேர டிஜிபியை நியமிப்பதில் சட்டரீதியாக காலதாமதம் செய்தது.

டிஜிபியை தமிழக அரசு
டிஜிபி நியமனத்தில் சீனியாரிட்டிபடியும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின் படியும் தகுதியுள்ள ஆறு நபர்கள் கொண்ட பட்டியலை தயாரித்து மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் உள்ள இது தொடர்பான கமிட்டியிடம் தாக்கல் செய்ய வேண்டும். அந்த 6 பேரை பரிசீலித்து அதில் 3 நபர்களை தமிழக அரசுக்கு கமிட்டி பரிந்துரை செய்யும். அந்த மூவரில் ஒருவரை தமிழக அரசு நியமிக்கலாம்.
ஆனால், இத்தகைய நடைமுறைகள் நடந்தும் தமிழக அரசு இதில் அக்கறைக்காட்ட மறுத்தது. இதற்கான சட்டரீதியான காரணங்களை வைத்திருக்கிறது தமிழக அரசு. இந்த நிலையில், இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்தது.
மூத்த வழக்கறிஞர் வில்சன் பிளான்
கடந்த பிப்ரவரி 12-ந் தேதி நடந்த விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ''டிஜிபி தோ்வுக்கான ஐந்து உறுப்பினா்களைக் கொண்ட தோ்வுக் குழுவை உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி யுபிஎஸ்சி அமைத்தது. மாநில அரசின் இரண்டு பிரதிநிதிகள் அதில் இடம்பெற்றனர். ஆனால், பொறுப்பு டிஜிபியாக உள்ள வெங்கட்ராமனும் முழு நேர டிஜிபிக்கான பரிசீலனையில் உள்ள ஒரு வேட்பாளா் என்பதால், அவருக்குப் பதிலாக கூடுதல் தலைமைச் செயலாளா் பதவியில் உள்ள உள்துறைச் செயலாளரை அக்குழுவில் சோ்க்குமாறு யுபிஎஸ்சியிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. ஆனால், அந்த கோரிக்கையை யுபிஎஸ்சி நிராகரித்துள்ளது'' என்று வாதிட்டாா்.
பொறுப்பு டிஜிபி
இதனைத் தொடர்ந்து, உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ''யூ.பி.எஸ்.சி. குழுவில் மாநில அரசின் இரண்டு உறுப்பினா்களைக் கொண்டிருக்க தமிழ்நாடு மாநிலத்திற்கு உரிமை இருக்கிறது. பொறுப்பு டிஜிபிக்கு பதிலாக டிஜிபியை விட பதவி மற்றும் அந்தஸ்தில் உயா்ந்த அதிகாரியைச் சோ்க்க தமிழ்நாடு மாநிலத்திற்கு நாங்கள் அனுமதி வழங்குகிறோம். டி.ஜி.பி பதவிக்கான திருத்தப்பட்ட பட்டியலை யூபிஎஸ்சியிடம் ஒரு வாரத்திற்குள் சமா்ப்பிக்குமாறு தமிழக அரசுக்கு நாங்கள் உத்தர விடுகிறோம். அதன் பிறகு இரண்டு வாரங்களுக்குள் யுபிஎஸ்சி ஒரு முடிவை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.
இந்த உத்தரவை தொடர்ந்து யூபிஎஸ்சிடம் பட்டியல் வழங்கப்பட்டிருக்க வேண்டும். வழங்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரியவரவில்லை. இதற்கிடையே விரைவில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது.
முழு நேர டிஜிபியை நியமிப்பதில் கால தாமதம்
இந்த நிலையில்தான், முழு நேர டிஜிபியை நியமிப்பதில் கால தாமதம் ஏற்படுத்தப்பட்டு வருவதால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தின் நிர்வாகம் அனைத்தும் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். அப்போது, தேர்தலை முன்வைத்து உயரதிகாரிகள் பலரும் மாற்றப்படுவர். ஏற்கனவே ஒரே இடத்தில் 3 ஆண்டுகாலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் அதிகாரிகளை மாற்றுங்கள் என தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கேற்ப பல மாற்றங்களை செய்தது தமிழக அரசு.
இருப்பின் தமிழக அரசின் நிர்வாக கட்டமைப்பு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் சென்றதும், உயரதிகாரிகள் மாற்றப்படுவதும் நிகழும். அந்த வகையில் பொறுப்பு டிஜிபியாக இருக்கும் வெங்கட்ராமனை மாற்றி விட்டு புதிதாக தங்களுக்கு வசதியான சட்டரீதியாக தகுதியுள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக அத்துறை வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. பொதுவாக தேர்தல் காலத்தில் டிஜிபி மாற்றப்பட்டால் புதிதாக நியமிக்கப்படுபவர் தேர்தல் கால டிஜிபி என்கிற போஸ்டிங்கில்தான் வைக்கப்படுவார். தேர்தல் கால டிஜிபி என்றுதான் அழைக்கப்படவும் செய்வார்.
ஆனால், இந்த முறை அப்படி ஒரு நியமனம் நடக்கிறபோது தேர்தல் கால டிஜிபி என சொல்லப்படாமல் முழு நேர டிஜிபியாக நியமிக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுவதாகவும் அதற்கான ஆலோசனைகள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications