சசிகலா + சீமான்.. "ஒர்க் அவுட்" ஆன சந்திப்பு.. மடை மாறிய வாக்குகள்.. தடதட தெற்கு.. திகைப்பில் அதிமுக
தென்மாவட்டங்களில் சீமானுக்கு இந்த முறை வாக்கு வங்கி அதிகரிக்கும் என்கிறார்கள்
சென்னை: தென்மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சி ஓரளவு வாக்கு வங்கியை பெற்றுள்ளதாக எக்ஸிட் போல் முடிவுகளின்படி கூறப்படுகிறது.. இதற்கு அடிப்படை காரணம் என்ன? சீமான் வகுத்த வியூகம்தான் என்ன?
சீமானை பொறுத்தவரை வெற்றியோ தோல்வியோ, தனி நபராகவே போட்டியிட்டு வருகிறார்.. இதற்கு மிகுந்த மனவலிமை தேவை.. இந்த முறையும் அப்படித்தான் இறங்கி உள்ளார்..
ஆனால், இந்த முறை தேர்தலில் அவரது 2 வியூகங்கள் பாராட்டத்தக்கது.. ஒன்று ஆதித் தமிழர் என்ற பெயரில் தலித் வேட்பாளர்களை சீமான் களம் இறக்கியது வித்தியாசமானதாகவும், துணிச்சலாகவும் பார்க்கப்படுகிறது..

திமுக
இதை அதிமுக, திமுக போன்ற பெரிய கட்சிகளே செய்யாத விஷயம்.. மேலும் வன்னியர்களின் இடஒதுக்கீடு விஷயம் பூதாகரமாக பேசப்பட்டதால், பாமக போட்டியிடும் 23 தொகுதிகளை தவிர்த்து பிற தொகுதிகளில் நிறைய இளைஞர்கள் வாக்குகள் சீமானுக்கு டிரான்ஸ்பர் ஆகி உள்ளது. மற்றொரு விஷயம், ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, சசிகலாவை சீமான் சந்தித்து பேசியது மிக நுட்பமான அரசியல் ஆகும்..

சசிகலா
நேரடியாகவே சசிகலாவை சீமான் சந்தித்து பேசியதால், நாம் தமிழர் கட்சிக்கு முக்குலத்தோர் வாக்குகள் ஓரளவு கிடைக்கும் என்று அப்போதே கணிக்கப்பட்டது.. தற்போது, தென் சென்னை, கொங்கு பகுதிகளில் பரவலாக நாம் தமிழருக்கு வாக்குகள் விழுந்திருக்கிறது என்றாலும், தென் மாவட்டங்கள், டெல்டாவில் நாம் தமிழரின் வாக்கு சதவீதம் அதிகமாகி உள்ளதே இந்த எக்ஸிட் போல்கள் நமக்கு சுட்டிக்காட்டும் உண்மை.

அமமுக
இதுதான் இந்த முறை சீமானின் டர்னிங் பாயிண்ட் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..
அதாவது, அதிமுக, திமுகதான் இருபெரும் எதிர்க்கட்சிகள் என்றாலும், தென் மாவட்டங்களில் அதிமுக ஓட்டை தினகரன்தான் பிரிக்க போகிறார் என்ற பேச்சு பலமாக எழுந்தது.. ஒருவகையில் இது உண்மையும், யதார்த்தமும்கூட..ஏனென்றால், காவிரி டெல்டாவில் அமமுக இறங்கி, நன்றாகவே வேலை பார்த்துள்ளது.. மேலும் சில இடங்களில் முந்திக் கொண்டு, 2வது இடம் வரும் என்றும் சொல்கிறார்கள்..

தினகரன்
அதிலும் திருவையாறு போன்ற பகுதிகளில் வெற்றி வாய்ப்பே வரும் என்றும் கணிக்கப்படுகிறது.. ஆனாலும் இந்த முறை தென்னகத்தின் பல தொகுதிகளில் சீமான், தினகரனைவிட முந்தியுள்ளாராம்.. அதாவது 6 முதல் 8 சதவீதம் வரை சீமானுக்கு ஓட்டு விழுமாம்.. அன்று, சசிகலாவை சென்று சந்தித்ததால், தான் ஒரு அதிமுக நலம்விரும்பி அல்லது சசிகலா நலம்விரும்பியாகவே சீமான் தன்னை காட்டிக் கொண்டுள்ளார்.. இதுதான் தென் மாவட்ட தேர்தல் களத்தில் ஒர்க் அவுட் ஆகி உள்ளது..

வாய்ப்பு
"திமுகதான் இந்த முறை வெற்றி பெற போகிறது, அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு" என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட மனநிலை தொண்டர்களிடம் சில மாதமாகவே இருந்து வந்தது.. அப்படிப்பட்ட மனநிலையில் இருந்த அதிமுகவினர்தான், இந்த முறை சீமானுக்கும் ஓட்டு போட்டிருப்பதாக சொல்கிறார்கள். அதாவது, "திமுகவை சீமான் இப்படி தாறுமாறாக திட்டுகிறாரே, ஸ்டாலினுடன் ஸ்ட்ரைட்டாகவே மோதுகிறாரே, இந்த அளவுக்கு அதிமுகவில்கூட யாரும் இல்லையே" என்று வியந்துபோன அதிமுக தொண்டர்கள் பலரும் சீமானுக்கே தங்கள் ஓட்டுக்களை செலுத்தி உள்ளார்களாம்..

நுட்பம்
இது இப்போதில்லை.. எம்பி தேர்தலின்போதும் இப்படித்தான் அரசியல் நுட்பம் நடந்தது.. அதிமுக ஓட்டு முழுக்க அமமுகவுக்கு போய்விட்டதாக நினைத்தார்கள்.. உண்மை அதுவல்ல.. ஓரளவு சீமானுக்கும் அப்போதே விழுந்தது.. இந்த முறையும் தென்மண்டலங்களில் சீமானுக்கு வாக்கு வங்கி உயர்ந்தே வந்துள்ளது என்று அறுதியிட்டு சொல்கிறார்கள் அரசியல் நுணுக்கர்கள்..!
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications