லிஸ்ட் வருது: 27-ம் தேதி வாக்காளர் பட்டியல் திருத்தம்.. தலைமை செயலகத்தில் இன்று அனைத்துகட்சி கூட்டம்
சென்னை: அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னையில் நடைபெற உள்ளது.. வரும் 27-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில், தலைமை செயலகத்தில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் இன்று நடக்கிறது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வருடந்தோறும், செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் நடைபெறும்... அந்தவகையில், இந்த வருடமும் நடைபெற உள்ளது.
லிஸ்ட்: வரும் அக்டோபர் 27 முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்படும்.. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டவற்றுக்கு டிசம்பர் 12வரை விண்ணப்பிக்கலாம். டிசம்பர் 26 வரை விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 2024 ஜனவரி 5ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வுக்குப்பிறகு, அடுத்த வருடம் ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிகிறது.
வாக்காளர் பட்டியல்: அந்தவகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்க போகின்றன.. தமிழகத்தை பொறுத்தவரை, நாளை மறுநாள் அதாவது, அக்டோபர் 27-ம் தேதி, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்குகின்றன. இதை முன்னிட்டுதான் இன்று அனைத்து கட்சி கூட்டமும் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதில், "வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளின் ஒரு பகுதியாக வரும் 27-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த சூழலில், அக்டோபர் 25-ம் தேதி அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

அனைத்து கட்சிகள்: இதில், பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம்ஆத்மி உள்ளிட்ட தேசிய கட்சிகள், திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய மாநில கட்சிகளும் பங்கேற்கின்றன.
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெறும் காலகட்டத்தில், பொதுமக்கள் வசதிக்காக நவ 4, 5 மற்றும் 18, 19 ஆகிய சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் வாக்குச்சாவடிகளில் நடைபெறுகிறது. பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அடுத்தாண்டு ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறியிருந்தார்.
எதிர்பார்ப்பு: அந்தவகையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் காலை 11.30 மணிக்கு நடக்கிறது. நாளை மறுநாள் வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், இன்று நடக்கும் இந்த அனைத்து கட்சி கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications