பராமரிப்பு பணி.. சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இன்று மின்சார ரயில்கள் ரத்து.. நோட் பண்ணுங்க
சென்னை: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யபட்டுள்ளது. தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை - பல்லாவரம் வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பயணிகளின் போக்குவரத்துக்கு பெரிதும் உதவிகரமாக இருப்பது மின்சார ரயில் சேவை தான். தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில் சேவையில் பீக் நேரங்களில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டால் கூட மொத்த சென்னையே ஸ்தம்பித்து போய்விடும் என்ற அளவுக்கு பயணிகளுக்கு இந்த மின்சார ரயில் சேவை இருந்து வருகிறது.

கல்லூரிக்கு செல்பவர்கள், பணிக்கு செல்பவர்கள் என பலரும் மின்சார ரயில் சேவையை தான் நம்பியிருக்கிறார்கள். சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடம் மட்டுமின்றி பல்வேறு வழித்தடங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. மற்ற நாட்களை விட ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் குறைவாகவே ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். இதனால் ரயில் சேவைகளும் குறைவாக இயக்கப்படும்.
மேலும் இந்த ஞாயிற்றுக்கிழமைகளில் தான் பராமரிப்பு பணிகளும் நடைபெறும். பயணிகள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் விதமாக இந்த பராமரிப்பு பணிகள் வாரம் வாரம் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இன்று தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - சென்னை கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யபட்டுள்ளது.
இன்று காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை கடற்கரை - பல்லாவரம், பல்லாவரம் - சென்னை கடற்கரை வரை சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருமார்க்கமாகவும் 30 - 45 நிமிட இடைவெளியில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலுக்கான சிறப்பு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- கடற்கரையில் இருந்து பல்லாவரத்திற்கு இன்று காலை 6.15. 6.55, 7.20, 7.45, 8, 8.35, 9.38, 10.10, 10.40, 11.20, 12.00, 1.05, 1.30, 2.30, 3.10, 3.45, 4.10, 4.30, 4.50, 5.10, 5.50, 6.20, 6.50, 7.00 மணி வரை இயக்கப்படும். இரவு 8 மணியில் இருந்து கடற்கரை - தாம்பரம் வரை மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும்.
இதேபோன்று பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரை இன்று காலை 7.10, 7.45, 8.10, 8.35, 8.55, 9.35, 10.35, 11.05, 11.35, 12.10, 12.55, 1.55, 2.25, 3.20, 4.00, 4.40, 5.05, 5.20, 5.40, 6.05, 6.40, 7.15, 7.40, 7.50 மணி வரை இயக்கப்படும். இரவு 8 மணிக்கு பிறகு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு வழக்கம் போல் மின்சார ரயில்கள் இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications