420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 200 யூனிட் மின்சாரம் இலவசம் என விஜய் தலைமையிலான அரசு கடந்த மே 10ம் தேதி அறிவித்தது. அதன்பிறகு பலருக்கும் மின் கட்டணம் ஏன் இவ்வளவு வந்துள்ளது. 200 யூனிட்டை கழித்தால், எங்களுக்கு 50 ரூபாய் தானே வரும்.. 100 ரூபாய் தானே வரும்.. எங்களுக்கு புரியவில்லை என்று கேள்வி எழுப்பியபடி உள்ளார்கள். இவர்களின் சந்தேகங்களை மின்சார வாரியம் தீர்த்து வருகிறது. அந்த வகையில் சரவணன் என்பவர் 420 யூனிட்டிற்கு ஏன் இந்த அளவிற்கு கட்டணம் வந்துள்ளது என்று கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மின்வாரியம் அளித்த விளக்கத்தை பார்ப்போம்.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. 101 - 500 யூனிட் வரை பயன்படுத்தினால் 100 யூனிட்கள் கழிக்கப்பட்டு மீதமுள்ள யூனிட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால 2026 சட்டசபை தேர்தல் வாக்குறுதியில், 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என தவெக தலைவர் விஜய் அறிவித்து இருந்தார்.

electricity bill eb bill electricity

அதன்படியே, முதல்வராக பதவியேற்ற விஜய், தமிழ்நாடு முழுவதும் 2 மாதங்களுக்கு 500 யூனிட்வரை மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். இந்த 200 யூனிட் இலவச மின்சார திட்டம் மே 10-ம் தேதியில் இருந்து கணக்கிடப்படும். 500 யூனிட்களுக்கு மேல் பயன்படுத்தினால் 100 யூனிட் இலவசம் என்ற பழைய திட்டமே தொடரும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது

இதற்காக மின்சார கணக்கீட்டு மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அனைத்து மேற்பார்வை பொறியாளர்களுக்கும் மின் வாரியம் சுற்றறிக்கையும் அப்போது அனுப்பியது. கட்டண மென்பொருளில் செயல்படுத்தப்பட்டுள்ள புதிய கூடுதல் மானிய விதிமுறை குறித்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு தெரிவிக்க பொறியாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இதன்படியே 2 மாதங்களுக்கு ஒருமுறை 500 யூனிட்கள் வரை மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு மே 10 முதல் 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. 500 யூனிட்களுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர், 100 யூனிட்கள் வரையிலான இலவச மின்சாரப்பலனைப் பெறுகிறார்கள்.

அதேநேரம் பலர் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்றால் ஏன்கட்டணம் அதிகமாக வந்துள்ளது என்று கேள்வி எழுப்பியபடி உள்ளார்கள். தமிழ்நாடு அரசு, மே 10, 2026 முதல் 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை அறிவித்தது. ஆனால், இந்த மாதம் எனது மின் நுகர்வு 420 யூனிட்டுகளாக உள்ளது; மின்கட்டண ரசீதில் 200 யூனிட்டுகளுக்குப் பதிலாக, 100 யூனிட்டுகள் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளன. இதற்கான காரணத்தை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என சரவணன் என்பவர் கூறியிருந்தார்

இதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் அளித்த விளக்கத்தில், தற்போதைய மின் கட்டண விவரம் (மே 25)

மொத்தப் பயன்பாடு: 423 யூனிட்டுகள்

வழக்கமான கட்டணம் (423 யூனிட்டுகளுக்கு): ரூ. 1320

மானியக் காலம்: மே 10 முதல் மே 25 வரை (மொத்தம் 15 நாட்கள் மட்டுமே இந்த சுழற்சியில் மானியத்திற்குத் தகுதியானவை).

கட்டணக் கழிவு மற்றும் செலுத்த வேண்டிய தொகை
இந்த 15 நாட்களுக்கான கணக்கீட்டின்படி, வழக்கமான 100 இலவச யூனிட்டுகளுடன் கூடுதலாக 27 யூனிட்டுகள் மானியத்திற்குத் தகுதியாகப் பெறுகின்றன.

0 முதல் 100 யூனிட்டுகள் வரை: இலவசம்

கூடுதல் 27 யூனிட்டுகளுக்கான மானியம்: ரூ. 63

இறுதிக் கணக்கீடு:

வழக்கமான கட்டணம்: ரூ. 1320

கழிவு (மானியம்): (-) ரூ. 63

நீங்கள் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை: ரூ. 1257

அடுத்த மாதக் கணக்கீடு (அடுத்த பில்லிங் சுழற்சி)

அடுத்த மாத மின் கணக்கீட்டின் போது, உங்களுடைய மொத்தப் பயன்பாடு 500 யூனிட்டுகளுக்குள் இருந்தால், புதிய மானியத் திட்டத்தின் கீழ் உங்களுக்கு 200 யூனிட்டுகள் வரை இலவசமாகப் வழங்கப்படும்" இவ்வாறு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+