வங்கி கணக்கு இருக்கா? கரண்ட் பில் கட்டிட்டீங்களா? இந்த மெசேஜ் வந்தால் ஓபன் பண்ணாதீங்க..புது வார்னிங்
சென்னை: நாளுக்கு நாள் ஆன்லைனில், மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை தந்து வரும்நிலையில், மின்வாரியம் முக்கிய அறிவுரையை தந்துள்ளது.
தொழில்நுட்பம் பெருக பெருக, மோசடிகளும் பெருகியபடியே உள்ளன.. புதிய புதிய வழிகளில், இந்த மோசடிகள் அரங்கேறி கொண்டிருக்கிறது.. நாடு முழுவதும் ஆன்லைன் பரிவர்த்தனைகளும், ஆன்லைன் செயல்பாடுகளும் அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்றவாறே, ஆன்லைன் மோசடிகளும் அதிகமாகி விட்டன.

மின்கட்டணம்: மின்கட்டணம் செலுத்த சொல்லி, மின்சாரம் வழங்கும் நிறுவனத்தில் இருந்து அனுப்பும் ஒரிஜினல் மெசேஜ் போலவே அனுப்புவார்களாம்..
உங்கள் செல்போன் நம்பருக்கு "அன்புள்ள வாடிக்கையாளரே உங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும். இன்று இரவு 9.30 மணிக்கு மின்வாரிய அலுவலகத்தில் இருந்து. ஏனெனில் உங்களின் முந்தைய மாத பில் புதுப்பிக்கப்படவில்லை. தயவு செய்து உடனடியாக எங்கள் மின்வாரிய அதிகாரி 82603XXX42 ஐ தொடர்பு கொள்ளவும்" என்பது போன்ற செய்தி நார்மல் மெசேஜ் அல்லது வாட்ஸ் அப் மூலம் வந்தால் அச்செய்தியை உடனடியாக delete செய்ய வேண்டும் என மின்வாரியத் துறை மக்களை எச்சரித்துள்ளது.
மர்மநபர்கள்: காரணம், அந்த மெசேஜ்ஜில் பணம் செலுத்துவதற்கான லிங்க்கையும் மர்மநபர்கள் தந்திருப்பார்கள்.. "மின்சாரம் துண்டிக்கப்படுமே" என்று பதற்றத்துடன், வாடிக்கையாளர்கள் அந்த லிங்கை கிளிக் செய்தால், உங்கள் வங்கியில் உள்ள மொத்த பணமும் காலியாகிவிடும். இப்படித்தான், ஒருவர், 4.9 லட்சத்தை இழந்திருக்கிறார்..
மர்மநபர்கள் அனுப்பும் அந்த லிங்கில் உங்கள் ஆதார், உங்கள் வங்கிக்கணக்கு விவரங்கள் போன்றவை கேட்கப்பட்டிருந்ததாம். அதனால், இந்த நபரும், எல்லா விவரங்களையும் பதிவிட்டிருக்கிறார். கடைசியில் 4.9 லட்சத்தை இழந்துவிட்டார். அதனால்தான், போலீசார், பொதுமக்களை எச்சரித்தபடியே உள்ளனர்.
பதற்றத்தில், அந்த மெசேஜில் இருக்கும் நம்பருக்கு போன் செய்தால், உங்கள் வங்கியில் இருக்கும் பணத்திற்கு உத்திரவாதம் இல்லை என்றும் கூறியுள்ளதால், அதிக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் மின்வாரியமும் கேட்டுக் கொண்டுள்ளது.
கவனம்: ஆன்லைன் பரிவர்த்தனைகளில் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.. இது போன்ற செய்திகளை கண்டால் உடனே, அதனை டெலிட் செய்ய வேண்டும் என்று மின்வாரியத் துறை மக்களை அறிவுறுத்தியிருக்கிறது. தங்களின் தனிப்பட்ட விவரங்களை ஒருபோதும் பகிர்ந்து கொள்ள கூடாது என்றும், அரசு துறை அதிகாரிகள் மற்றும் வங்கி அதிகாரிகள் யாருமே மக்களின் தனிப்பட்ட விவரங்களை கேட்க மாட்டார்கள் என்றும் மின்வாரியம் கூறியிருக்கிறது.












Click it and Unblock the Notifications