ஈரோடு, திருப்பூர், கோவை தந்த "ஷாக்".. கரண்ட் பில்லில் மாற்றம் வருகிறதா? கோட்டைக்கு எகிறிய மேட்டர்
சென்னை: தமிழகத்தில் மின் கட்டண உயர்வை ரத்து செய்யும்படி தொடர் கோரிக்கைகள் முன்வைத்து வரும்நிலையில், இன்னொரு கோரிக்கையும் தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த வருடம் செப்டம்பர் 10-ம் தேதி மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு வலுத்தது.. இந்தநிலையில், மத்திய அரசு மின் கட்டணத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. அதன்படி அனைத்து மாநிலங்களும் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று அறிவித்தது.
கட்டண உயர்வு: இதையடுத்து, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.. இதனை தமிழக அரசும் அமல்படுத்தியது. அதன்படி, வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இது வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்காக உயர்த்தப்பட்ட மின் கட்டணம் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

விசைத்தறி தொழிலாளர்கள்: குறிப்பாக, திருப்பூர், கோவை போன்ற மாவட்டங்களில் விசைத்தறி தொழிலாளர்கள் பெருத்த அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர்.. அதனால் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து, செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன், தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி ஆகியோரிடம் மனுவையும் தந்திருக்கிறார்கள்.
இந்நிலையில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி காரணம்பேட்டையில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முதல் கட்டமாக கோவை, திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ள காரணம்பேட்டையில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதமும் நடந்துள்ளது.
பரிசீலனை: 15 சதவீதம் கூடுதல் மின் கட்டணத்தினால், எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. இதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும், அதனால், எம்எஸ்எம்இ தொழில் துறையினரின் நியாயமான கோரிக்கையை ஏற்று உயர்த்தப்பட்ட நிலை கட்டணம், உச்சபட்ச பயன்பாட்டு நேர மின் கட்டணம் ஆகியவற்றை உடனடியாக தமிழக அரசு திரும்ப பெற வேண்டும். அதுவரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர்.

அடுத்த கட்டமாக செப்டம்பர் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மின்னஞ்சல், ஸ்பீட் போஸ்ட், கொரியர் மூலம் மனு அனுப்பவும், 25-ம் தேதி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்தில் ஒரு நாள் தொழில் நிறுவனங்கள் கதவடைப்பு செய்து, கருப்புக் கொடி ஏற்றவும் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.
மாற்றம் வருமா?: கரண்ட் பில் உயர்வுக்கு அடுத்தடுத்த எதிர்ப்புகள் எழுந்துவரும்நிலையில் விரைவில் மின்கட்டண உயர்வில் மாற்றம் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications