கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு.. புதிய விதிமுறைகளால் ஏற்பட போகும் சிக்கல்
சென்னை: தமிழகத்தில் குறிப்பிட்ட அளவு கட்டிட அளவுகளுக்கு இனி கட்டிட நிறைவு சான்றிதழ் இல்லாமல் மின் இணைப்பு வழங்கும் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ள அச்சம் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் விதிமீறல் கட்டிடங்கள் கட்டப்படுவதை தவிர்க்கவே மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு உள்பட அரசின் பல்வேறு வசதிகளை பெற கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாகவே பலர் கட்டிடத்தை முறையாக கட்டி வந்தனர். என்ஜினியரிங் வரைப்படம் முதல் மழைநீர் சேமிப்பு வரை எல்லா விஷயத்திலும் பார்த்து பார்த்து கவனமாக இருந்தனர்.

ஏனெனில் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்திற்கு, கட்டிட நிறைவு சான்றிதழ் பெற வேண்டும் என்றால், அரசிடம் சமர்பித்த வரைபடத்தில் உள்ள அளவில்தான் கட்டிடம் கட்டி இருக்க வேண்டும். அதில் விதிமீறல்கள் இருந்தால் பணி நிறைவு சான்றிதழ் வழங்க மாட்டார்கள். இதன் காரணமாக கட்டிடம் கட்டுபவர்கள் இந்த விதிகளை முறையாக கடைபிடித்து வந்தனர்.
ஆனால் அதேநேரம் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கட்டுமான அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இருந்து தமிழக அரசுக்கு புகார்கள் பறந்தன. கட்டிட நிறைவு சான்றிதழ் பெற லஞ்சம் கேட்கிறார்கள் என்று சிலரும், சிலர் கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுவது எளிமையாக இல்லாமல் மிகவும் சவாலாக உள்ளதாகவும் கூறி புகார்கள் தெரிவித்தனர்.பெரிய கட்டிடங்களை விட சிறிய அளவில் வீடு கட்டுவோர் இந்த கட்டிட நிறைவு சான்றிதழ் பெறுதவற்கு பல்வேறு வகையில் சிக்கல்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழக அரசு, குறிப்பிட்ட சில அளவுள்ள கட்டிடங்களுக்கு இனி பணி நிறைவு சான்றிதழ் வேண்டாம் என்று அறிவித்துள்ளது. அதன்படி 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள், 750 சதுர மீட்டர் (8,073 சதுரடி) பரப்பளவிற்கு உட்பட்ட வீடு, 14 மீட்டர் (46 அடி) உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் (3,230 சதுரடி) கட்டிட பரப்பளவிற்கு உட்பட்ட வணிக கட்டிடங்கள் மற்றும் அனைத்து தொழிற்சாலை கட்டிடங்களுக்கும் விலக்கு அளித்தது.
இதுகுறித்து மின்சார வாரியமும் அதிகாரபூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பணி நிறைவு சான்றிதழ் இல்லாமலேயே கட்டிடங்களுக்கு இனி மின் இணைப்பு பெற முடியும் எனற அரசின் உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இது வரவேற்பை பெற்ற போதிலும் எதிர்ப்பும் உள்ளது.
முன்னதாக வணிக கட்டிடங்கள் எந்த அளவாக இருந்தாலும் கட்டிட பணி நிறைவு சான்றிதழ் கட்டாயம் இருந்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் விதிமீறல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
ஏற்கனவே உள்ள விதியின்படி கட்டிடம் கட்டுபவர்கள் விதிகளை மீறினால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டது இல்லை. அதேநேரம் அவர்களுக்கு இருந்த ஒரே கடிவாளம் என்றால், கட்டிட நிறைவு சான்றிதழ் வழங்கினால்தான் மின் இணைப்பு என்ற சூழ்நிலை இருந்தது. இதனால் இந்த விதிக்கு அச்சப்பட்டு தான் விதிமீறல் கட்டிடங்கள் வராமல் இருந்தது. தற்போது விதி விலக்கு வழங்கி இருப்பதால் விதிமீறல் கட்டிடங்கள் அதிகரிக்கும் என்று அச்சம் தெரிவிக்கிறார்கள் சிலர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications