தமிழகத்தில் தொழில், வணிக நிறுவனங்களுக்கு இன்று முதல் மின்கட்டணம் உயர்வு! எவ்வளவு? வீடுகளுக்கு இல்லை
சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மின்கட்டணம் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி பெரிய தொழில், பெரிய வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் இன்று முதல் 3.16 சதவீதம் மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதேநேரத்தில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வை தமிழக அரசே ஏற்று செலுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் தமிழகத்தில் மின்கட்டணம் அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்தும் வகையில் கடந்த 2022ம் ஆண்டில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2022 செப்டம்பர், 10ல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி 12 சதவீதம் முதல் 52 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.

மேலும் அந்த நிதியாண்டு முதல் 2026 -2027 வரை, ஆண்டுதோறும் ஜூலை, 1ம் தேதி முதல், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. மின்கட்டண உயர்வு 6 சதவீதத்தை விட அதிகரிக்க கூடாது அல்லது ஏப்ரல் மாத நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஆகிய இரண்டில் எது குறைவோ அப்படி உயர்த்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
அதன்படி கடந்த 2023ல் 2.18 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. 2024ல் 4.18 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியானது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் குறியீட்டு எண், 3.16 சதவீதமாக இருக்கிறது. இதனால் 3.16 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மின்சார வாரியங்களின் நிதி நிலைமை சீராக இருப்பதற்காக அந்தந்த மாநிலங்களின் ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது மின்கட்டணத்தில் மாற்றம் செய்து வருகிறது. அதன்படி 2025 - 26 ஆண்டிற்கு ஜூலை 1 முதல் வரக்கூடிய மின்கட்டண மாற்றங்களில் பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலன் கருதி, 2.42 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு ஏற்படக்கூடிய மின்கட்டண மாற்றங்களை அரசே ஏற்று கொண்டு அதற்கான மானியத்தொகையை தமிழக மின்சார வாரியத்துக்கு வழங்கும்.
மேலும் அனைத்து வீட்டு மின் நுகர்வோர்களுக்கும் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை இணைப்புகளுக்கும் தொடர்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும். விவசாயம், விசைத்தறி, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலை ஆகிய மின்கட்டண பிரிவிற்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடர்ந்து வழங்கப்படும்
புதிய மின்கட்டண சலுகைகள்:
1. இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை பயன்படுத்தும் சிறு வணிக மின் நுகர்வோர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டு ஒன்றுக்கு ரூ.51.41 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள சுமார் 34 லட்சம் சிறுவணிக மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
2. 50 கிலோவாட் வரை ஒப்பந்த பளு கொண்ட தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால் ஆண்டொன்றுக்கு ரூ.76.35 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள 2.81 லட்சம் தாழ்வழுத்த தொழிற்சாலை மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
3. குடிசை மற்றும் குறு தொழில்களுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.9.56 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள 2.70 லட்சம் குடிசை மற்றும் குறு தொழில் மின்நுகர்வோர்கள் பயனடைவார்கள்.
4. விசைத்தறி நுகர்வோர்களுக்கு ஆயிரம் யூனிட் வரை இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். மேலும் 1001 யூனிட்களுக்கு மேல் உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை தமிழக அரசே ஏற்று மானியமாக வழங்குவதால், ஆண்டொன்றுக்கு ரூ.7.64 கோடி அரசுக்கு கூடுதல் செலவாகிறது. இதனால், தமிழகத்தில் உள்ள 1.65 லட்சம் விசைத்தறி நுகர்வோர்களும் பயனடைவார்கள்.
2025- 26 ம் ஆண்டின் மின்கட்டண உயர்வின்படி தமிழகத்தில் சுமார் 2.83 கோடி மின் நுகர்வோர்களுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லாமல் பயனடைவார்கள். இதனால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.519.84 கோடி கூடுதல் செலவாகும். இந்த மானியத்தொகையை மின்சார வாரியத்துக்கு, தமிழக அரசு வழங்கும். பெரிய தொழில், தொழில் வணிக நிறுவனங்கள் மற்றும் பிறவகை கட்டண பிரிவுகளுக்கு தமிழக ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்தபடி 3.16 சதவீதம் மிகாமல் மின்கட்டணம் உயர்த்தப்படும்'' என கூறப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications