"பதற்றத்துடன் காத்திருங்கள்".. வானிலையை பாதிக்க போகும் "யானை".. வல்லுனர்கள் விடுத்த வார்னிங்!
சென்னை: தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை உச்சம் தொட்டு உள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது.
இதையடுத்து 2 நாட்களுக்கு முன் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியை முன்னிட்டு அடுத்த வாரம் மீண்டும் தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மழைக்காலம்
இது தொடர்பாக சென்னை ரெயின் வானிலை (www.chennairains.com) ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ள கணிப்பில், மழைக்காலம் என்பது வெறும் வார்த்தைதான். ஆனால் வடகிழக்கு பருவமழை என்பது ஒரு உணர்வு. தென்மேற்கு பருவமழையின் போது காற்றழுத்த தாழ்வு பகுதிகள் பெரும்பாலும் திட்டமிடப்பட்ட பாதையில்தான் நகரும். பெரும்பாலும் தென்மேற்கு பருவமழைக்கான காற்று பாகிஸ்தானில் இருந்து கூட தொடங்கும், அல்லது ராஜஸ்தானில் இருந்து தொடங்கி வங்கக்கடல் வரை கூட செல்லும்.

சென்னை ரெயின்ஸ்
சமயங்களில் இது வடகிழக்கு மாநிலங்கள் வழியாகவும் செல்லும். இதனால் இதை எளிதாக கணிக்க முடியும். ஆனால் வடகிழக்கு பருவமழை அப்படி கிடையாது.வடகிழக்கு பருவமழையை ஏற்படும் தாழ்வு நிலைகள் மாற்றம் அடைய கூடிய தன்மை கொண்டவை. இதனால் வெதர் மாடல்கள் காணிப்பதற்கு சவாலானதாக இருக்கும். இதன் காரணமாகவே இதன் டிரெண்டுகளை கணிப்பதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

என்ன நடக்கும்?
காற்றழுத்த தாழ்வு பகுதியின் தொடக்கத்திலேயே அது எப்படி இருக்கும் என்ற டிரெண்டை கணிப்பது இதனால்தான் சிக்கலாகிறது. இப்போது உருவாகி இருக்கும் தாழ்வு பகுதியும் இதே குழப்பத்தைதான் ஏற்படுகிறது. சாட்டிலைட் புகைப்படங்கள் அடிப்படையில் பார்த்தாலும் இன்னும் நிலைமை எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியவில்லை.

வானிலை
இந்த பகுதியில் பல்வேறு சுழற்சிகள் காணப்படுவதால், காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்றாக இணைவதில் தாமதம் ஏற்படுகிறது. இந்த சுழற்சிகள் ஆதிக்கம் செலுத்த தொடக்கத்தில் முயற்சிக்கும். இதன் காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி போல இது கிடையாது. இது மேற்கு நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.

சுழற்சி
அடுத்தடுத்து 24 - 48 மணி நேரங்களில் வலிமையான சுழற்சி இங்கே ஏற்படும். அதன்பின் இது வலிமைபெற தொடங்கும். அதே சமயம் "அறைக்குள் இருக்கும் யானையை" பற்றி நாம் பேசியே ஆக வேண்டும். அந்த யானைதான் வறண்ட காற்று. இந்த வறண்ட காற்று கண்டிப்பாக காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏற்படும் மழையில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வறண்ட காற்று காரணமாக இந்த தாழ்வு பகுதி வலிமை அடைவது பாதிக்கப்படும்.

பதற்றத்துடன்தான் காத்திருக்க வேண்டும்
இதனால் இந்த தாழ்வு பகுதி ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலிமை அடைந்து அதற்கு மேல் வலிமை அடையாத நிலையை அடைவதற்கு வாய்ப்பு உள்ளது. ஆனாலும் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்வதற்கான ரிஸ்க் இன்னமும் இருக்கிறது. எந்த கடல் பகுதி இதனால் அதிகம் பாதிக்கப்படும் என்பதில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. புதுச்சேரி - நெல்லூர் ஸ்டிரெட்ச் முழுக்க இதனால் பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன. வரும் நாட்களில் இந்த தாழ்வு பகுதி வலிமை அடைய அடைய அதன் பாதை முழுமையாக தெரிய வரும். அதுவரை பதற்றத்துடன்தான் காத்திருக்க வேண்டும், என்று குறிப்பிட்டு உள்ளனர்.












Click it and Unblock the Notifications