இந்தியாவில் டெஸ்லா கார்கள் எப்போது? யூ டியூபர் மதன் கௌரி கேள்விக்கு... எலான் மஸ்க் பளிச் பதில்
சென்னை: இந்தியாவில் டெஸ்லா காரை அறிமுகம் செய்யத் தாமதம் ஆவது ஏன் எனப் பிரபல யூ டியூபர் மதன் கௌரி கேட்டிருந்த கேள்விக்கு, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் பளிச் எனப் பதிலளித்துள்ளார்.
Recommended Video
உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா முதல் ஸ்பேஸ் எக்ஸ் வரை பல்வேறு முக்கிய டெக் நிறுவனங்களை இவர் நடத்தி வருகிறார்.
இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்டுகளை தான் இப்போது அமெரிக்காவின் நாசா பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பிய முதல் தனியார் நிறுவனம் என்ற சிறப்பையும் ஸ்பேஸ் எக்ஸ் பெற்றுள்ளது.

டெஸ்லா கார்கள்
எலான் மஸ்க்கின் நிறுவனங்களில் மிகவும் முக்கியமானது டெஸ்லா. எலக்ட்ரிக் கார்கள் என்றாலே மெதுவாகத் தான் செல்லும் என்ற பொதுமக்களின் மனநிலையை மாற்றியதில் டெஸ்லாவின் பங்கு முக்கியமானது. அட்டகாசமான தோற்றம், அதிவேகத்தில் செல்லும் திறன் என சூப்பராக வெளியான டெஸ்லா எலக்டிரிக் கார்கள் அமெரிக்காவில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தியாவில் இல்லை
புவி வெப்ப மயமாதல், காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை உலகம் எதிர்கொண்டு வரும் நிலையில், பல நாடுகளும் எலக்டிரிக் கார்களை நோக்கித் திரும்பியுள்ளன. இதனால் டெஸ்லா நிறுவனம் வேகமாகத் தனது சந்தையை விரிவுபடுத்தி வருகிறது. இருப்பினும், டெஸ்லா நிறுவனம் இதுவரை இந்தியாவில் எந்தவொரு காரையும் அறிமுகப்படுத்தவில்லை.

மதன் கௌரி கேள்வி
இது குறித்து பிரபல யூ டியூபர் மதன் கௌரி எலான் மஸ்கை டேக் செய்து கேள்வி எழுப்பியிருந்தார். டெஸ்லா கார்களை விரைவில் எலான் மஸ்க் இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும் என்று மதன் கௌரி ட்விட் செய்திருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள எலான் மஸ்க் இரண்டு காரணங்கள் காரணமாகவே இந்தியாவில் டெஸ்லா கார்களை அறிமுகம் செய்யவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

எலான் மஸ்க் பளிச்
மதன் கௌரிக்கு எலான் மஸ்க் அளித்த பதிலில், "டெஸ்லா கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த வேண்டும் என்பது தான் எங்களின் விருப்பமும்கூட. ஆனால் உலகிலேயே இறக்குமதி வரி இங்கு தான் அதிகமாக உள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் வாகனங்களைப் போலவே தூய்மை எரிசக்தி வாகனங்களும் கருதப்படுகின்றன. இவை காலநிலை மாற்றத்தைத் தடுக்கும் இந்தியாவின் இலக்குகளுடன் ஒத்துப்போவதில்லை.

இந்தியாவில் உற்பத்தி
மின்சார வாகனங்களுக்குக் குறைந்தபட்சம் தற்காலிகமாக இறக்குமதி வரிகளில் நிவாரணம் கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க் தனது மற்றொரு ட்வீட்டில், இறக்குமதி செய்யப்படும் டெஸ்லா கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் இந்தியாவிலேயே டெஸ்லா கார் உற்பத்தியைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா கார்கள்
இந்தியாவில் 40 ஆயிரம் டாலருக்கு மேல் உள்ள கார்கள் இறக்குமதி செய்யப்படும்போது, அதற்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. அதேபோல 40 ஆயிரம் டாலருக்கு குறைவாக உள்ள கார்களுக்கு 60% இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இந்த வரியை 40% ஆகக் குறைப்பது குறித்து டெஸ்லா நிறுவனம் மத்திய அரசுடன் ஆலோசித்து வருகிறது. அதேநேரம் இந்த ஆண்டிற்குள் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனையைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications